News November 3, 2025
பாலியல் குற்றவாளிகளை காக்கும் அரசு: அண்ணாமலை

திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறை அதிகாரிகள் வரை பாலியல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். <<18183470>>கோவை கல்லூரி மாணவி<<>> கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாலியல் குற்றங்களை தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ திமுக ஆட்சி தவறிவிட்டதாகவும், இதற்கு CM ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 4, 2025
BREAKING: கோவை சம்பவத்தில் 3 பேரை சுட்டுப்பிடித்த போலீஸ்

கோவையில் மாணவியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 3 பேரை தனிப்படை போலீசார் சுட்டுப்பிடித்தனர். CCTV காட்சிகளின் அடிப்படையில் தேடுதல் வேட்டை நடத்திய தனிப்படை போலீசார் குணா தவசி, சதீஸ், கார்த்திக் காளீஸ்வரன் ஆகியோரை துடியலூர் பகுதியில் சுற்றி வளைத்தனர். தாக்குதல் நடத்தி 3 பேரும் தப்பிக்க முயன்றதால் காலில் சுட்டுப்பிடித்ததாக போலீஸ் கூறுகிறது. 3 பேரும் கோவை அரசு ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
News November 4, 2025
நடிகர்கள் அரசியலில் நடிக்க கூடாது: சரத்குமார்

அரசியலுக்கு வரும் நடிகர்கள் மக்களுக்கு உண்மையாக இருக்க வேண்டும் என சரத்குமார் தெரிவித்துள்ளார். இந்தியா ஒரு ஜனநாயக நாடு என்பதால் நடிகர்களும் அரசியலுக்கு வரலாம் என்றும், ஆனால் அதிலும் நடிக்க கூடாது எனவும் அவர் பேசியுள்ளார். அவர்களின் தகுதி, பேசும் விஷயங்கள், அவற்றை செயல்படுத்தும் திறன் உள்ளதா? எதற்காக அரசியலுக்கு வருகின்றனர் என்பதை மக்களும் புரிந்து கொள்ள வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
News November 4, 2025
திமுக ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்தான சூழல்: சீமான்

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். X-ல், கோவை மாணவிக்கு நடந்த கொடூரம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்கும் வரை இதுபோன்ற சமூகக் குற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், கோவை கொடூரத்திற்கு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட திமுக அரசு தவறியதே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.


