News November 3, 2025

கோப்பையை வெல்ல உதவிய சைலெண்ட் ஹீரோ!

image

இந்திய அணி கோப்பையை வெல்ல மாஸ்டர் மைண்டாக இருந்து செயல்பட்டவர் கோச் அமோல் மசும்தார். 1994- 2013 வரை முதல்தர கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை விளாசிய அவருக்கு ஏனோ இந்தியா அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சச்சினும் காம்பிளியும் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை விளாசிய போது, அதே அணியில் இடம் பெற்றும், ஆட முடியாமல் போன அமோல், தான் இன்று இந்தியாவின் சைலெண்ட் ஹீரோ. இவரையும் கொண்டாடுவோம்.

Similar News

News November 4, 2025

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்தான சூழல்: சீமான்

image

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். X-ல், கோவை மாணவிக்கு நடந்த கொடூரம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்கும் வரை இதுபோன்ற சமூகக் குற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், கோவை கொடூரத்திற்கு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட திமுக அரசு தவறியதே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். ▶பொருள்: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

News November 4, 2025

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும்

image

அதிகாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

error: Content is protected !!