News November 3, 2025

கிருஷ்ணகிரி: சொந்த ஊரிலே அரசு வேலை!

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காலியாக உள்ள 50 கிராம ஊராட்சி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். இதற்கு சம்பளமாக ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். வயது வரம்பு: OBC/BCM: 18-34, SC/ST:18-37, மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகள் தளர்வுகள் உண்டு. விண்ணப்பிக்க கடைசி தேதி: நவ.9 இந்த <>லிங்க் <<>>மூலம் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க.

Similar News

News November 4, 2025

கிருஷ்ணகிரி: 3ம் குலோத்துங்கன் கால கல்வெட்டு கண்டுபிடிப்பு

image

கிருஷ்ணகிரி மாவட்டம் அரசம்பட்டி அருகே மஞ்சமேடு கிராமத்தில் மூன்றாம் குலோத்துங்கன் காலத்து வணிக கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டது. கஜ லட்சுமி சிற்பம், யானை, குத்துவிளக்கு போன்ற வணிகச் சின்னங்களுடன் செதுக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வுக் குழு நடத்திய ஆய்வில், இது 825 ஆண்டுகள் பழமையான வணிகக்குழு கல்வெட்டாகும் என உறுதி செய்யப்பட்டது.

News November 4, 2025

கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

image

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (03.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

கிருஷ்ணகிரி: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

error: Content is protected !!