News November 3, 2025

திரிணாமுல் MLA மீது திடீர் தாக்குதல்

image

மே.வங்கத்தில் திரிணாமுல் MLA ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில், நேற்று இரவு புகுந்த இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மல்லிக் கூச்சலிட்டத்தை அடுத்து, பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, இளைஞரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அபிஷேக் தாஸ் என்ற அந்த இளைஞர், வேலைக்காக மல்லிக்கிடம் பேச வந்ததாக கூறியுள்ளார். அவர் ஏற்கெனவே மனநல சிகிச்சைக்கு பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.

Similar News

News November 4, 2025

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பேராபத்தான சூழல்: சீமான்

image

திமுக ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற பேராபத்தான சூழல் நிலவுவதாக சீமான் சாடியுள்ளார். X-ல், கோவை மாணவிக்கு நடந்த கொடூரம் தொடர்பாக பதிவிட்டுள்ள அவர், மது மற்றும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களை ஒழிக்கும் வரை இதுபோன்ற சமூகக் குற்றங்களை தடுக்க முடியாது என தெரிவித்துள்ளார். மேலும், கோவை கொடூரத்திற்கு பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்திட திமுக அரசு தவறியதே காரணம் என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 4, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேறற்க யாரையும் தேராது தேர்ந்தபின் தேறுக தேறும் பொருள். ▶பொருள்: எவரையும் ஆராயாமல் பதவியில் அமர்த்த வேண்டா; ஆராய்ந்த பிறகு தேர்ந்தவற்றின்மேல் சந்தேகம் கொள்ளவும் வேண்டா.

News November 4, 2025

7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பொழியும்

image

அதிகாலை 4 மணி வரை 7 மாவட்டங்களில் மழை பெய்யும் என IMD கணித்துள்ளது. சென்னை மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளிலும், செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிபேட்டை, திருவண்ணாமலை, கோவை ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலைகளில் தண்ணீர் தேங்க வாய்ப்புள்ளதால் வாகன ஓட்டிகள் கவனமாக பயணிக்கவும். உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?

error: Content is protected !!