News November 3, 2025

மதுரையில் பூக்களின் விலை கடும் உயர்வு

image

மதுரை மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள் கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகின்றன, கடந்த சில நாட்களாக பூக்களின் வரத்து குறைந்ததால் விலை அதிகரித்து காணப்படுகிறது, மல்லிகை ரூபாய் 800 முதல் 1000 வரை, பிச்சி கிலோ ரூபாய் 500 முதல் 600, செவ்வந்தி கிலோ 150 முதல் 200, முல்லை ரூபாய் 600 முதல் 700 வரை, கனகாம்பரம் 1000 முதல் 1200 வரை விற்பனையாகி வருகிறது.

Similar News

News November 4, 2025

மதுரையில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம்

image

மதுரை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத் திட்டம் – 2026 இன்று தொடங்கியது. வீடு தோறும் சென்று கணக்கெடுக்கும் பணிகள் நவ.4 முதல் டிச.4 வரை நடைபெறும். புதிய வாக்காளர்கள் பெயர் சேர்க்க, திருத்தம் மற்றும் நீக்க விண்ணப்பங்கள் டிசம்பர் 8 வரை பெறப்படும். இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 7, 2026 அன்று வெளியிடப்பட உள்ளது.

News November 3, 2025

மதுரை : இனி Gpay, Phonepe, paytm -க்கு குட்பை!

image

மதுரை மக்களே Gpay, Phonepe, paytm இனி தேவை இல்லை. நெட் இல்லாமல் பணம் அனுப்பும் வசதி தெரியனுமா? இந்த எண்களுக்கு 080 4516 3666, 080 4516 3581, 6366 200 200 போனில் அழைத்து உங்கள் வங்கியை தேர்ந்தெடுத்து, UPI PIN பதிவு செய்து பணம் அனுப்புவது, நெட் பில், கேஸ், கரண்ட்பில், ரீசார்ஜ் செய்யலாம். இனி உங்களுக்கு பணம் செலுத்த நெட் தேவை இல்லை. மற்றவர்களுக்கு தெரியபடுத்த SHARE பண்ணுங்க..

News November 3, 2025

மதுரை மாநகராட்சி அதிகாரிகள் திண்டாடடி வருகின்றனர்

image

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளில், மக்கள் பிரச்னைகளை சரிசெய்ய மெயின் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படும் ‘கம்ப்ளையின்ட் செல்’ என்ற ஆப் உள்ளது. இதில் பதிவு செய்யப்படும் புகார்கள் குறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு அதற்கான புகைப்படத்தினை நிகழ்விடத்தில் அதிகாரிகள் பதிவேற்றம் செய்ய முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

error: Content is protected !!