News November 3, 2025

நாகை: பாதுகாப்பு பணிகள் தீவிரம் ‌

image

நாகையில் இன்று நடைபெறும் தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் 10ஆவது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநரும் பல்கலைக்கழக வேந்தருமான ஆர். என். ரவி பங்கேற்று 496 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார். விழா இன்று காலை 11 மணிக்கு நாகூரிலுள்ள பல்கலைக்கழக கலையரங்கத்தில் நடைபெறும் விழாவை முன்னிட்டு சுமார் 500க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Similar News

News November 4, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் நேற்று (நவ.03) இரவு 10 மணி முதல் இன்று (நவ.04) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News November 3, 2025

வீடுகளில் கணக்கெடுப்பு படிவம் வழங்கப்படும்; ஆட்சியர் தகவல்

image

நாகை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்படி பல்வேறு கட்டங்களாக கணக்கெடுப்பு 2026 பிப். 7ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இப்பணிக்கான கணக்கெடுப்பு படிவம் நாளை முதல் வீடு வீடாக வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டு, டிச.4ஆம் தேதிக்குள் மீளப் பெறப்படும் என மாவட்ட ஆட்சியா ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

34 மீனவர்களுக்கு நீதிமன்ற காவல்; இலங்கை நீதிமன்றம் உத்தரவு

image

இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 31 மீனவர்களை கைது செய்துள்ளனர்.
அக்கரைப்பேட்டை மற்றும் நம்பியார் நகரை சேர்ந்த மூன்று விசைப்படகுகளுடன் கைது செய்யப்பட்ட இம்மீனவர்கள் இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் நவ.17 வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!