News November 3, 2025

கடலூர்: துணிக்கடையில் தவறவிட்ட பணம் ஒப்படைப்பு

image

கடந்த 17.10.2025 அன்று கடலூரில் உள்ள துணிக்கடை ஒன்றில் தீபாவளி துணி எடுக்க வந்த பிள்ளையார் குப்பத்தைச் சேர்ந்த அனிதா என்பவர் ரூ.10,500-ஐ துணிக்கடையில் தவறவிட்டுள்ளார். இதையடுத்து கடலூர் புதுநகர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன் பேரில், புதுநகர் குற்றப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பாலு தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு பணத்தை கண்டுபிடித்து நேற்று அனிதாவிடம் ஒப்படைத்தனர்.

Similar News

News November 4, 2025

கடலூர்: 8 பி.டி.ஓ-க்கள் அதிரடி இடமாற்றம்

image

கடலூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி அலகில் பணிபுரியும் 8 வட்டார வளர்ச்சி அலுவலர்களை நிர்வாக காரணங்களுக்காக இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதன்படி வட்டார வளர்ச்சி அலுவலர் சண்முக சிகாமணி, முருகன், பாலாமணி, ஜெயக்குமார், லட்சுமி, சங்கர், செந்தில் வேல் முருகன், வீராங்கன் ஆகியோர் மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

News November 4, 2025

கடலூர்: மகளுக்கு பாலியல் தொல்லை அளித்த தந்தை

image

விருத்தாசலம் பகுதியை சேர்ந்தவர் 28 வயது கூலி தொழிலாளி. இவருக்கு 9 வயதில் மகள் உள்ளார். இந்நிலையில் கடந்த 28-ம் தேதி தனது மகளுக்கு அவர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதையறிந்து அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் அளித்த புகாரின் பேரில் விருத்தாசலம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் சிறுமியின் தந்தையை கைது செய்தனர்.

News November 3, 2025

கடலூர்: 12th போதும், ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) காலியாக உள்ள 1429 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு குறைந்தது 12-ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக்<<>> செய்து வரும் நவ.16-க்குள் விண்ணப்பிக்கலாம். இதனை அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

error: Content is protected !!