News November 3, 2025
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹320 உயர்வு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ₹320 உயர்ந்துள்ளது. 22 கேரட் 1 கிராம் ₹11,350-க்கும், சவரன் ₹90,800-க்கும் விற்பனையாகிறது. கடந்த வாரத்தில் ஏற்றம், இறக்கம் கண்டு வந்த தங்கம், இந்த வாரத்தின் முதல் நாளிலேயே மிகப்பெரிய மாற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. <<18183589>>பங்குச்சந்தைகள் தொடர்ந்து<<>> சரிந்து வருவதால் இன்று மாலையிலும் விலை உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News November 4, 2025
அப்ளை செய்த உடனே பயிர்க் கடன்.. வந்தது புது அப்டேட்!

தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில் விண்ணப்பித்த அன்றே பயிர்க் கடன் வழங்கும் திட்டம் டிசம்பர் மாதம் முதல் அமலுக்கு வரவுள்ளது. முதற்கட்டமாக தருமபுரியில் 131 தொடக்க கூட்டுறவு சங்கங்களில் 2 மாதங்களுக்கு வழங்கப்பட்டது. ஆனால், மற்ற மாவட்டங்களில் விரிவாக்கம் செய்யப்படாமல் இருந்த நிலையில், உடனடி கடன் வழங்க ஏதுவாக புதிய மென்பொருள் உருவாக்கும் பணிகள் நடந்து வருவதாக அரசு விளக்கம் அளித்துள்ளது.
News November 4, 2025
FLASH: சென்னையில் 5 இடங்களில் ED ரெய்டு!

சென்னையில் அமைந்தகரை, நெற்குன்றம், சூளைமேடு உள்ளிட்ட 5 இடங்களில் ED அதிகாரிகள் அதிகாலை முதலே சோதனை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தொடர்பாக இந்த சோதனை நடத்தப்பட்டு வருவதாக முதற்கட்டத் தகவல் வெளியாகியுள்ளது.
News November 4, 2025
சல்யூட் மேடம்.. கிரிக்கெட்டர் to DSP தீப்தி சர்மா!

உலகக்கோப்பையை வெல்ல காரணமான இந்திய வீராங்கனை தீப்தி சர்மாவுக்கு உத்தர பிரதேச காவல்துறையில் DSP பதவி வழங்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை இறுதி போட்டியில் 50 ரன்கள் & 5 விக்கெட்களை வீழ்த்தி கோப்பையை வெல்ல தீப்தி சர்மா முக்கிய பங்காற்றினார். தொடர் நாயகி விருதையும் வென்ற தீப்தி சர்மா, ஒட்டுமொத்த 2025 உலகக்கோப்பையில் 215 ரன்களையும், 22 விக்கெட்களையும் கைப்பற்றி இருந்தார்.


