News November 3, 2025

ராமேஸ்வரம் மீனவர்கள் 4 பேர் கைது

image

திருவாடனை நம்புதாளையைச் சேர்ந்த பாலமுருகன்(30), தினேஷ்(18), குணசேகரன்(42), ராமு(22) ஆகியோர் நம்புதாளை கடற்கரையிலிருந்து நேற்று (நவ.2) பைபர் படகில் மீன் பிடிக்கச் சென்றனர். இன்று (நவ.3) அதிகாலை நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்த போது ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி 4 மீனவர்களை படகுடன் கைது செய்து காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு கொண்டு சென்றனர்.

Similar News

News November 4, 2025

ராமநாதபுரத்தில் வாகன ஓட்டிகள் தவிப்பு

image

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக மழையின்றி வெயில் வாட்டி வதைக்கிறது. இதே நேரத்தில் கடும் பனிப்பொழிவு காரணமாக காலை நேரங்களில் பனிமூட்டம் சூழ்ந்து சாலைகள் மறைந்து விடுகின்றன. இதனால் கனரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் பனிபொழிவால் வாகனங்களை இயக்குவதில் சிரமம் அடைகின்றன்ர். விவசாயிகள் வடகிழக்கு பருவமழைக்காக எதிர்பார்த்துள்ளனர்.

News November 4, 2025

ராம்நாடு: ஆபரணங்கள் தயாரிக்கும் இலவச பயிற்சி

image

இராமநாதபுரம் சிகில் ராஜ தெரு, சாந்த் பீபி காம்ப்ளக்ஸ், 2வது தளத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி ஊரக சுய வேலை வாய்ப்பு பயிற்சி நிறுவனம் நடத்தும் “செயற்கை ஆபரணம் தயாரித்தல் இலவச பயற்சி” அளிக்கப்பட உள்ளது. பயிற்சி ஆரம்பிக்கப்படும் நாள் நவ. 14 ஆகும். பயிற்சி நாட்கள் – 14. பயிற்சி நேரம்: 9:30 AM – 5.00 PM . முன்பதிவுக்கு :
9087260074,8056771986. SHARE!

News November 3, 2025

ராம்நாடு: மக்கள் குறை தீர் நாள் கூட்டம்: 317 பேர் மனு

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் இன்று (நவ.3) நடந்தது. கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமை வகித்தார். இதில் வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும், குடிநீர் இணைப்பு கோரி 317 பேர் மனு அளித்தனர். மாவட்ட வருவாய் அலுவலர் புகாரி சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை ஆட்சியர் கிருஷ்ணகுமாரி, மாவட்ட வழங்கல் அலுவலர் மணிமாறன் உடனிருந்தனர்.

error: Content is protected !!