News November 3, 2025

நெல்லை: பிளஸ் 2 மாணவர்கள் கவனத்திற்கு

image

நெல்லை மாவட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவர்கள் அடுத்த 2026 – 27ம் கல்வி ஆண்டில் ஐஐடி என்ஐடி உள்ளிட்ட உயர்த்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் பிஇ, பி டெக் சேர்க்கைக்கு ஜே இ இ மெயின் தேர்வுக்கு நவம்பர் 27ம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். www.nta.ac.in இன்று இணையதளத்தை பயன்படுத்தி விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு மைய விவரம் ஜனவரி முதல் வாரத்தில் வெளியிடப்படும்.

Similar News

News November 4, 2025

திருநெல்வேலி: 15 நாள் போலீஸ் தடை உத்தரவு

image

திருநெல்வேலி மாநகர எல்லை பகுதியில் இன்று நள்ளிரவு 12 முதல் வருகிற 18ஆம் தேதி வரை 15 தினங்களுக்கு போலீஸ் தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், தர்ணா, கூட்டங்கள், போராட்டம் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் கருதி இந்த தடை அமலில் இருக்கும் என மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி தெரிவித்துள்ளார்.

News November 4, 2025

நெல்லையில் கொலை; 15 நிமிடத்தில் குற்றவாளி கைது

image

நெல்லை மாநகர பெருமாள்புரம் டாஸ்மார்க் பாரில் இருந்து 200 மீட்டர் தொலைவில் அமைந்துள்ள கோழி கடையில் வைத்து நேற்று இரவு மது போதையில் ஏற்பட்ட தகராறில் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்தவர்களான பாலகிருஷ்ணன் என்பவரை அவரது நண்பரான செல்வம் என்பவர் கொலை செய்துள்ளார். இதனை அறிந்த பெருமாள்புரம் காவல்துறையினர் 15 நிமிடங்களில் குற்றவாளியை மடக்கி பிடித்து கைது செய்தனர்.

News November 3, 2025

மாவட்டத்தில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் உத்தரவின் படி நெல்லை மாவட்டத்தில் இன்று (நவ.3) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

error: Content is protected !!