News November 3, 2025

தருமபுரி: ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து சரிவு

image

தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து கணிசமாகக் குறைந்துள்ளது. நேற்று (நவ.01) இரவு விநாடிக்கு 8000 கன அடியாக இருந்த நீர்வரத்து, நீர்பிடிப்புப்பகுதிகளில் மழை குறைந்ததால் இன்று (நவ.02), ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணியளவில் 6500 கனஅடியாகக் குறைந்துள்ளதாக மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் மழைபெய்தால் நீர்வரத்து அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar News

News November 3, 2025

இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம்

image

தர்மபுரி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று (03.11.2025) இரவு நேர ரோந்துப் பணியில் ஈடுபடும் காவல் ஆய்வாளர்கள் விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வாளர், சந்திரசேகரன் தலைமையில், அதியமான்கோட்டை பகுதியில் நெடுஞ்செழியன் , தோப்பூரில் பிரபாகரன் , மதிகோன்பாளையத்தில் அரிச்சந்திரன் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் சரவணன் ஆகியோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவார்கள். பொதுமக்கள் அவசர உதவிக்கு இவர்களை அணுகலாம்.

News November 3, 2025

தர்மபுரி எம்.பி திருமண விழாவில் முதல்வர் ஸ்டாலின்

image

தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (நவ.3) தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தில் நடைபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ஆ.மணி எம்.பி இல்ல திருமண விழாவில் கலந்துகொண்டார். பிரகதீஸ்வரன் – மது பிரதிக்சா ஆகியோரின் திருமணத்தை தலைமையேற்று நடத்திவைத்து, மணமக்களை வாழ்த்தினார்.

News November 3, 2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக அதியன் கூட்டரங்கில் நடைபெற்றது. மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட ஆட்சித்தலைவர் ரெ.சதீஸ், இன்று (நவ.3) பெற்றுக்கொண்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)கவிதா, மகளிர் திட்ட இயக்குநர்அ.லலிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

error: Content is protected !!