News November 3, 2025

மயிலாடுதுறை: போக்ஸோ வழக்கில் ஆசிரியர் கைது

image

மயிலாடுதுறை சித்தர்காட்டை சேர்ந்த சாம்சங் பிரபாகரன்(54) மயிலாடுதுறை அரசு உதவி பெறும் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக உள்ளார். இந்நிலையில் பள்ளியில் 8ஆம் வகுப்பு முடித்த 14வயது மாற்றுத்திறனாளி மாணவி 5மாதம் கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்தது. தகவலறிந்த மயிலாடுதுறை மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் விசாரணை நடத்தியதில் இதற்கு கரணம் உடற்கல்வி ஆசிரியர் என தெரியவர போலிசார் அவரை போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

Similar News

News November 3, 2025

தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற சௌமியா அன்புமணி

image

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மணி விழா நிகழ்வு தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் நிகழ்வான இன்று பசுமைத்தாயக தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றார். ஆதீனம் அவருக்கு கோயில் பிரசாதம் நினைவு பரிசு வழங்கி ஆசி வழங்கினார்.

News November 3, 2025

மயிலாடுதுறை: 12th போதும், ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) காலியாக உள்ள 1429 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு குறைந்தது 12-ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து வரும் நவ.16-க்குள் விண்ணப்பிக்கலாம். இதனை அரசு வேலை தேடும் நபர்களுக்கு SHARE பண்ணுங்க!

News November 3, 2025

மயிலாடுதுறை: பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர்

image

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டம் ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் உடன் இருந்தார்

error: Content is protected !!