News November 3, 2025

தென்னாப்பிரிக்காவை விடாத சோகம்!

image

உலகக்கோப்பையை வெல்ல முடியாத தென்னாப்பிரிக்காவின் சோகம் தொடருகிறது. 2023 & 2024 மகளிர் T20 WC, 2024 ஆண்கள் T20 WC, 2025 மகளிர் ODI என கோப்பை கனவை 4 முறை நெருங்கிய போதும், ஏமாற்றமே மிஞ்சியது. இதில் இருமுறை(2024 ஆண்கள் T20 WC & 2025 மகளிர் ODI) இந்தியா அந்த கனவை உடைத்தது. இந்த ஆண்டு நடைபெற்ற WTC கோப்பையை மட்டும் தென்னாப்பிரிக்கா வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. என்ன பண்றது சோகமா தான் இருக்கு!

Similar News

News November 4, 2025

கோவை சம்பவம்: போலீஸ் என்ன செய்கிறது? பிரேமலதா

image

கோவை மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தை பிரேமலதா விஜயகாந்த் வன்மையாக கண்டித்துள்ளார். விமான நிலையம் போன்ற முக்கியமான இடத்தில் இதுபோன்று நடக்கிறது என்றால் போலீஸ் என்ன செய்கிறது எனவும், CCTV கேமரா அனைத்து இடங்களிலும் செயல்படுகிறதா என்பதை அரசு ஆய்வு செய்யவும் அவர் வலியுறுத்தியுள்ளார். மேலும், குற்றவாளிகளை உடனே கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்கவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

News November 4, 2025

ராசி பலன்கள் (04.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

News November 4, 2025

போட்டிபோட்டு ஆஃபர் அறிவித்த நிறுவனங்கள்

image

Zepto-வை தொடர்ந்து Instamart-ம் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. அதன்படி, ₹299-க்கு மேல் ஆர்டர் செய்தால், டெலிவரி கட்டணம் உள்பட எவ்வித கூடுதல் கட்டணங்களும் வசூலிக்கப்படாது என்று தெரிவித்துள்ளது. ₹199-க்கு மேல் ஆர்டர் செய்தால் ₹16, அதற்கு கீழ் ஆர்டர் செய்தால் ₹30 சராசரியாக வசூலிக்கப்படும். முன்னதாக, இலவச டெலிவரிக்கான குறைந்தபட்ச ஆர்டர் தொகையை ₹199-ல் இருந்து ₹99 ஆக <<18188504>>Zepto<<>> குறைத்தது.

error: Content is protected !!