News November 3, 2025
திருப்பத்தூர்: ஏலகிரி மலை சென்றவருக்கு நேர்ந்த சோகம்

சென்னையை சேர்ந்த தனியார் வங்கி ஊழியர் ஷாஹித் என்பவர் நேற்று (நவ.02) காரில் குடும்பத்துடன் ஏலகிரி மலைக்கு சுற்றுலா சென்றார். இந்த நிலையில் வாணியம்பாடி பெருமாள் பேட்டை ரயில்வே மேம்பாலம் மீது சென்றபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவில் இருந்த தடுப்பு மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காரில் இருந்த நால்வரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
Similar News
News November 3, 2025
ஜோலார்பேட்டை: கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது!

ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்பவர் இன்று (நவ.3) ஜோலார்பேட்டை அருகே ஜே.என்.ஆர் நகர் நாகாலம்மன் கோயில் அருகே சுமார் 1 கிலோ கஞ்சா வைத்து விற்பனை செய்துள்ளார். அப்போது, ஜோலார்பேட்டை போலீசார் அவரை கையும் களவுமாக பிடித்து கைது செய்து திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
News November 3, 2025
திருப்பத்தூர் மாவட்டத்தில் குடும்ப அட்டை சிறப்பு திருத்தம்!

திருப்பத்தூர் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட பொதுமக்கள் குறைதீர்வு முகாம் வரும் நவ.8ம் தேதி காலை 10.00 மணி முதல் மதியம் 01.00 மணி வரை வட்ட வழங்கல் அலுவலர்கள் தலைமையில் நடைபெறவுள்ளது என இன்று தெரிவிக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் தாலுக்கா, கெஜல்நாயக்கன்பட்டி, ஆம்பூர், மராபாத், வாணியம்பாடி, ஆவரங்குப்பம், நாட்றம்பள்ளி, நியாய விலை கடைகளில் குடும்ப அட்டையில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.
News November 3, 2025
திருப்பத்தூர்: கல்லூரி மாணவர் மீது தாக்குதல்!

திருப்பத்தூர் மாவட்டம் பந்தாரப்பள்ளி பாரதிதாசன் பொறியியல் கல்லூரியில் பயிலும் திலிப் குமார், கடந்த (நவ.1) அன்று சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது, அவ்வழியே பைக்கில் வந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்து திலிப் குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து, திலீப்குமார் அளித்த புகாரின் பேரில், நாட்றம்பள்ளி போலீசார் 5 பேர் மீது வழக்கு பதிவு செய்து விஜயராகவன் என்பவரை கைது செய்தனர்.


