News April 19, 2024
இஸ்ரேலுக்கு உதவி; 28 ஊழியர்களை நீக்கியது கூகுள்

கூகுள் நிறுவனத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட 28 ஊழியர்களை அந்நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்தி வருகிற இஸ்ரேல் ராணுவத்துக்கு ஏஐ & கிளவுட் தொழில்நுட்ப சேவை வழங்க கூகுள் $1.2 பில்லியனுக்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. ராணுவத்துக்கு தொழில்நுட்ப ரீதியாக உதவுவதை எதிர்த்து நியூயார்க் & கலிபோர்னியாவில் உள்ள கூகுள் அலுவலகங்களில் ஊழியர்கள் மேல் தர்ணா செய்தனர்.
Similar News
News February 1, 2026
கோலியின் சாதனையை முறியடித்தார் பாபர் ஆஸம்

ஆஸி.,க்கு எதிரான 3-வது T20 போட்டியில் பாக்., 111 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 208 ரன்கள் என்ற இலக்கை துரத்திய ஆஸி., 96 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன் மூலம், 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை பாக்., முழுமையாக கைப்பற்றியது. இப்போட்டியில் 50 ரன்கள் அடித்த பாபர் ஆஸம், டி20 போட்டிகளில் அதிக அரைசதங்கள் (39) அடித்த வீரர் என்ற பெருமையை பெற்றதுடன், கோலியின் சாதனையையும் (38) முறியடித்தார்.
News February 1, 2026
விமர்சனத்தில் உண்மை இருக்க வேண்டும்: நிர்மலா சீதாராமன்

மத்திய பட்ஜெட்டை <<19023280>>ராகுல் <<>>விமர்சித்த நிலையில், FM நிர்மலா சீதாராமன் பதிலடி கொடுத்துள்ளார். அரசியல் ரீதியில் விமர்சிக்க விரும்பினால், தாராளமாக செய்யுங்கள். ஆனால், உங்கள் வாதத்திற்கு அடிப்படையாக இருக்கும் உண்மைகளை நீங்கள் எனக்கு கூற விரும்பினால், அதை கேட்கவும், அதற்கு பதிலளிக்கவும் தயாராக இருக்கிறேன். அரசியல் விமர்சனம் வரவேற்கத்தக்கது என்றாலும், அதில் உண்மை இருக்க வேண்டும் என பதிலடி கொடுத்துள்ளார்.
News February 1, 2026
தங்கம், வெள்ளி.. விலை ₹1 லட்சம் குறைந்தது!

கடந்த ஒரு வாரத்தில் (ஜன.26 – பிப்.1) மட்டும் வெள்ளி விலை 1 கிலோவுக்கு ₹1.05 லட்சம் குறைந்துள்ளது. ஆனால், வாரம் தொடங்கியது முதலே கிலோவுக்கு ₹50,000 வரை அதிகரித்த வெள்ளி விலை, கடந்த 2 நாள்களாக குறைந்துள்ளது. இதன்படி, ஒரு வாரத்தில் மட்டும் கிராமுக்கு வெள்ளி விலை ₹105 வரை குறைந்து ₹320-க்கு விற்கப்படுகிறது. தங்கம் விலையும் குறைந்துள்ளதால் இன்று நகைக்கடைகளில் கூட்டம் காணப்படுகிறது.


