News November 3, 2025
மணல்மேடு அருகே முதியவர் தற்கொலை

மணல்மேடு அருகே இளந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் ஆசை தம்பி (65) இவர் வயிற்று வலியால் அவதி அடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு பயன்படுத்தக்கூடிய பூச்சி மருந்தை குடித்துள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உறவினர்கள் அவரை மீட்டு சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி ஆசைத்தம்பி பரிதாபமாக உயிரிழந்தார்.
Similar News
News November 3, 2025
தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்ற சௌமியா அன்புமணி

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீன மடாதிபதி 27ஆவது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் மணி விழா நிகழ்வு தொடங்கி விமர்சையாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாள் நிகழ்வான இன்று பசுமைத்தாயக தலைவர் சௌமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தருமபுரம் ஆதீனத்திடம் ஆசி பெற்றார். ஆதீனம் அவருக்கு கோயில் பிரசாதம் நினைவு பரிசு வழங்கி ஆசி வழங்கினார்.
News November 3, 2025
மயிலாடுதுறை: 12th போதும், ரூ.71,900 வரை சம்பளம்!

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) காலியாக உள்ள 1429 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு குறைந்தது 12-ம் வகுப்பு முடித்த, 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 முதல் ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
News November 3, 2025
மயிலாடுதுறை: பள்ளியில் ஆய்வு செய்த ஆட்சியர்

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் வட்டம் ஆறுபாதி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவு வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீகாந்த் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவை ருசித்து பார்த்து அதன் தரத்தை ஆய்வு செய்தார். ஆய்வின்போது மகளிர் திட்ட அலுவலர் சீனிவாசன் உடன் இருந்தார்


