News November 3, 2025
ஈரோடு: தேசிய நெடுஞ்சாலையில் திடீர் விபத்து!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த வடவள்ளி அருகே பொள்ளாச்சி பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மங்களூரில் இருந்து மாட்டு தீவனபாரம் ஏற்றிக் கொண்டு பெருந்துறை நோக்கி லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை அருகே கவிழ்ந்து விபத்துக்குள்ளானது அருகில் இருந்தவர்கள் ஓட்டுநரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சத்தியமங்கலம் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தனர்.
Similar News
News November 3, 2025
சென்னிமலை அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சென்னிமலை அருகே ஒட்டவலசு , முத்தம்மாள்,60;, சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். அவரது வீட்டை ஒட்டியவாறு மண் சுவர்களுடன் கூடிய ஆட்டு கொட்டகை உள்ளது. இன்று மதியம் முத்தம்மாளின் பக்கத்து வீடு மாயம்மாள் ,முத்தம்மாள் வீட்டுக்கு சென்று பார்த்த போது முத்தம்மாள் ஆட்டு கொட்டகை சுவர் இடிந்து விழுந்து இறந்து போனநிலையில் கிடந்ததை பார்த்துள்ளார். புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை .
News November 3, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, பகுதி நேர வேலைவாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறையினர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.
News November 3, 2025
ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 3 தினங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் 13 துறைகளைச் சார்ந்த 43 சேவைகள் வெளிப்படை தன்மையோடு வழங்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். குறிப்பாக புதிய ரேஷன் கார்டு மகளிர் உரிமை திட்டம் ஜாதி சான்றிதழ் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.


