News November 3, 2025
உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் குறைந்தது

உலக சந்தையில் தங்கம் விலை மீண்டும் சரிவை கண்டுள்ளது. 1 அவுன்ஸ் $22 குறைந்து $3,958-க்கு விற்பனையாகிறது. உலக சந்தையில் கடந்த மாதம் தங்கம் விலை மளமளவென குறைந்ததால் நம்மூரிலும் விலை கணிசமாக குறைந்துள்ளது. வாரத்தின் முதல் நாளிலேயே சரிவுடன் தொடங்கியுள்ளதோடு, இந்திய பங்குச்சந்தைகள் உயர்வுடன் காணப்பட்டால் தங்கம் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது. தற்போதைய நிலவரப்படி சவரன் ₹90,480-க்கு விற்பனையாகிறது.
Similar News
News November 3, 2025
பெண்கள் கிரிக்கெட் விளையாட தகுதி இல்லை: EX BCCI தலைவர்

உலகக்கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றதை நாடே கொண்டாடி வருகிறது. இந்நிலையில், EX BCCI தலைவர் ஸ்ரீனிவாசன் முன்பு பேசியதாக கூறப்படும் கருத்து தற்போது வைரலாகி வருகிறது. தனக்கு அதிகாரம் இருந்தால், மகளிர் கிரிக்கெட்டை தடை செய்திருப்பேன். பெண்களுக்கு கிரிக்கெட் விளையாட தகுதி இல்லை என அவர் கூறியிருந்ததாக, முன்னாள் இந்திய மகளிர் அணி கேப்டன் டயானா எதுல்ஜி தெரிவித்து இருந்தார்.
News November 3, 2025
நடிப்பில் ஆஸ்கரை மிஞ்சும் விலங்குகள்

சில விலங்குகள் உயிருக்கு ஆபத்தான சூழலில், இறந்ததுபோல் நடித்து உயிர்பிழைக்கின்றன. வேட்டையாடும் உயிரினங்களிடமிருந்து தப்பிக்கவே பெரும்பாலும் நடிக்கின்றன. அவை என்னென்ன விலங்குகள், எப்படி நடிக்கின்றன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோன்று உங்களுக்கு தெரிந்த விலங்குகள் பெயரை கமெண்ட்ல சொல்லுங்க.
News November 3, 2025
92 வயதில் 37 வயது பெண்ணை அம்மா ஆக்கினார்❤️❤️

92 வயதில் அப்பாவாகி உலகையே திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் ஆஸி., டாக்டர் ஜான் லெவின். இவரின் மகன், தன் 65-வது வயதில் நோய் பாதித்து உயிரிழந்தார். இந்நிலையில் தங்களுக்கு ஒரு வாரிசு இல்லாமல் போய்விடுமோ என்ற கவலையில் ஆழ்ந்த லெவினும், அவரது 2-வது மனைவியான 37 வயது யான் யிங்கும் குழந்தை பெற முடிவெடுத்தனர். அதன்பின், IVF முறையில் முயற்சிக்க முதல் அட்டம்டிலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.


