News November 2, 2025
தினமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த பாதாம் நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.
Similar News
News November 3, 2025
இனி நாம் நுகர்வோர் அல்ல, முன்னோடி: PM

<<18184055>>ESTIC 2025<<>> மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, இந்தியா இனி தொழில்நுட்பத்தின் நுகர்வோர் அல்ல, தொழில்நுட்பம் சார்ந்த மாற்றத்தில் உலகளாவிய முன்னோடி என்று குறிப்பிட்டார். டிஜிட்டல் உள்கட்டமைப்பு வளர்ந்துள்ளதாக கூறிய அவர், காப்புரிமை பதிவுகள் 17 மடங்கு அதிகரித்து உள்ளதாகவும், ஸ்டார்ட்அப் சூழலில் உலகில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
News November 3, 2025
நவ.6-ல் அரசு சார்பில் அனைத்து கட்சி கூட்டம்!

சென்னை தலைமைச் செயலகத்தில் நவ.6-ம் தேதி அமைச்சர்களின் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெறும் என்று அரசு அறிவித்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், MP, MLA-க்களுடன் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அரசியல் பொதுக்கூட்டங்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. அங்கீகரிக்கப்படாத தவெக போன்ற கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்படாது என தெரிகிறது.
News November 3, 2025
பெண்கள் வெளியே தலைகாட்டவே அச்சம்: நயினார்

கோவையில் கல்லூரி மாணவி கூட்டு பாலியல் செய்யப்பட்ட விவகாரம் விவாதமாக மாறியுள்ளது. இதுகுறித்து நயினார், வீட்டில் இருந்தாலும் வெளியில் போனாலும் பெண்கள் வேட்டையாடப்படுகிறார்கள் என குற்றம் சாட்டினார். கடந்த நான்கரை ஆண்டுகளாக ஒவ்வொரு நாளும் ஒருவித பதற்றத்துடனேயே பொழுது விடிகிறது; DMK ஆட்சியில் பெண்கள் வெளியே தலைகாட்டவே அஞ்சுகின்றனர். ஆனால், CM கவலையின்றி கம்பு சுற்றிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.


