News April 19, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: அறத்துப்பால் ▶இயல்: பாயிரவியல்
▶அதிகாரம்: கடவுள் வாழ்த்து ▶குறள் எண்: 6
▶குறள்:
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.
▶பொருள்: மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
Similar News
News January 23, 2026
திமுகவின் முயற்சி கைகூடுமா?

திமுக கூட்டணியில் இணைய ராமதாஸ் தரப்பு பேச்சுவார்த்தை நடத்திவருவதாக தகவல் வெளியானது. ஆனால் இதற்கு திருமா தரப்பு சுணக்கம் காட்டிவருகிறதாம். இதனால் விசிகவை சமாதானப்படுத்தும் முயற்சியில் திமுகவும் ராமதாஸ் தரப்பும் இறங்கியிருப்பதாக சொல்கிறார்கள். வரும் தேர்தலை எதிர்கொள்ள பல கட்சிகளின் கூட்டணி அவசியம் என திமுக கருதுவதால் விசிக இம்முடிவுக்கு மனமிறங்கி வருமா என அரசியல் வட்டாரத்தில் கேள்வி எழுந்துள்ளது.
News January 23, 2026
234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்: செங்கோட்டையன்

தமிழகத்தின் இருபெரும் கட்சிகளும் தங்களுடன் கூட்டணிக்கு வாருங்கள் என கெஞ்சி கொண்டிருப்பதாக செங்கோட்டையன் கூறியுள்ளார். ஆனால், விஜய் தனித்தே நிற்பார், இருப்பினும் நல்ல கூட்டணி அமையும் என நம்பிக்கை தெரிவித்த அவர், 234 தொகுதிகளிலும் மகத்தான வெற்றி அடைவோம் என்றார். தவெகவுக்கு நேற்று விசில் சின்னம் ஒதுக்கப்பட்ட நிலையில், தேர்தல் பணிகள் விறுவிறுப்படைந்துள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News January 23, 2026
ஜனநாயக குரல்வளையை நெரிக்கும் திமுக: நயினார்

பிற மாநிலங்களில் உள்ள பிரச்னைகளுக்கு முதல் ஆளாக போர்க்கொடி பிடிக்கும் திமுக, TN போராட்டக்காரர்களின் மீது அடக்குமுறையை ஏவுவது ஏன் என நயினார் கேள்வி எழுப்பியுள்ளார். கறிக்கோழி உற்பத்தி நிறுத்த போராட்டத்தை பற்றி குறிப்பிட்ட அவர், சொந்த மக்களின் ஜனநாயக குரல்வளையை இரும்புக்கரம் கொண்டு திமுக நெருக்குவதாக கூறியுள்ளார். மேலும், மாநில உரிமைகள் பற்றி பேச திமுகவுக்கு என்ன தகுதி இருக்கிறது என கேட்டுள்ளார்.


