News November 2, 2025

மாணவி பலாத்காரம் – வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை

image

திருவண்ணாமலை: கீழ்பென்னாத்துார் அடுத்த வசூர் கிராமத்தை சேர்ந்த சிவா என்பவர், கடந்த 2022, மார்ச் 11ல், 12ம் வகுப்பு படித்து வந்த மாணவியை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்தார். இது குறித்த வழக்கு திருவண்ணாமலை போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் வழக்கை விசாரித்த நீதிபதி காஞ்சனா, குற்றவாளி சிவாவிற்கு, 20ஆண்டு சிறை மற்றும் 20,000 அபராதம் விதித்து உத்தரவிட்டார்.

Similar News

News November 3, 2025

தி.மலை: 12th PASS போதும்! ரூ.71,900 வரை சம்பளம்!

image

தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர் பணிக்கு (Health Inspector Grade-II) 1429 காலி இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு முடித்து 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.19,500 – ரூ.71,900 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் இங்கே <>கிளிக் <<>>செய்து நவ.16க்குள் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

தி.மலை: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) தி.மலை மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரியப்படுத்துங்க.

News November 3, 2025

தி.மலை: உங்கள் ஊரில் ரோடு சரியில்லையா?

image

தி.மலை மக்களே உங்கள் பகுதியில் உள்ள சாலைகளில் பள்ளமாகவும், பராமரிப்பின்றியும் இருக்கிறதா? யாரிடம் புகார் கொடுப்பது என்று தெரியவில்லையா? அப்ப இத பண்ணுங்க! அந்த சாலையைப் புகைப்படம் எடுத்து “நம்ம சாலை” செயலியை பதிவிறக்கம் செய்து புகார் அளிக்கலாம். மாவட்ட சாலைகள் 72 மணி நேரத்திலும், மாநில நெடுஞ்சாலைகள் 24 மணி நேரத்திலும் சரி செய்யப்படும் எனக் கூறப்படுகிறது. இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க.

error: Content is protected !!