News November 2, 2025

புதுகைக்கு சரக்கு ரயிலில் வந்த 1300 டன் உரங்கள்

image

புதுக்கோட்டை மற்றும் சிவகங்கை மாவட்ட விவசாய பணிகளுக்கு தேவையான 1300 டன் சம்பா சாகுபடிக்கு தேவையான உரங்களான யூரியா 723 டன், டிஏபி 255 டன், NPK 127 டன், அமோனியம் 190 டன் தூத்துக்குடியில் இருந்து இன்று (நவ.02) புதுக்கோட்டை ரயில் நிலையத்திற்கு வந்து இறங்கியது. புதுக்கோட்டை விவசாயிகள் வேளாண் அலுவலகத்தை தொடர்பு கொண்டு உரங்களை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 3, 2025

புதுகை: அறிவுரை கூறியவருக்கு அருவாள் வெட்டு

image

விராலிமலை, பெரிய முள்ளிப்பட்டியை சேர்ந்த 16 வயது சிறுவன் தனது நண்பருடன் பைக்கில் வேகமாக சென்றுள்ளார். அப்பொழுது அதே பகுதியை சேர்ந்த பாண்டியன் (38), ஏன் வேகமாக சென்றீர்கள்? என கேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த சிறுவனின் தந்தை கருப்பையா அவரது தம்பி கோவிந்தன், இருவரும் பாண்டியனை அருவாளால் வெட்டியுள்ளனர். இது தொடர்பாக இரண்டு பேரையும் மண்டையூர் போலீசார் கைது செய்யது சிறையில் அடைத்தனர்.

News November 3, 2025

புதுகை: வீடு கட்ட ரூ.2.10 லட்சம் உதவி!

image

முதலமைச்சரின் பசுமை வீடு திட்டம் பற்றி தெரியுமா? வீடு இல்லமால் தவிக்கும் குடும்பங்களுக்கு இலவசமாக 300 சதுரடியில் ரூ.2.10 லட்சம் மதிப்பில் மழை நீர் சேகரிப்பு வசதி, 5 சூரிய சக்தியால் இயங்கும் CF விளக்கு வசதியுடன் வீடு கட்டி தரப்படும். இந்த திட்டத்தில் நீங்களும் பயனடைய வேண்டுமா? உங்கள் கிராம பஞ்சாயத்து அலுவலகத்தில் தகுந்த ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் வீடு கட்டும் கனவு நிறைவேறும். ஷேர் பண்ணுங்க!

News November 3, 2025

புதுகை: சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்குப்பதிவு!

image

புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூர் அருகே பூனை குத்திப்பட்டியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து அப்பகுதியில் சோதனை மேற்கொண்ட இலுப்பூர் போலீஸார் சூதாட்டத்தில் ஈடுபட்ட சுந்தர்(34), சரவணன்(58), வெள்ளைக்கண்ணு(36), பாண்டி(36) ஆகிய 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்த இலுப்பூர் போலீஸார் அவர்களிடமிருந்து சூதாட்ட அட்டை, ரூ 5 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

error: Content is protected !!