News November 2, 2025
இனிமேல் இங்கு சிகரெட் புடிக்க முடியாது!

தங்களது எதிர்கால சந்ததியினர் ஆரோக்கியமாக வாழ, மாலத்தீவு அரசு வரலாற்று சிறப்புமிக்க முடிவு ஒன்றை எடுத்துள்ளது. 2007 ஜனவரி 1-ம் தேதிக்கு பின்னர் பிறந்தவர்கள், புகையிலை பொருள்களை வாங்கவோ பயன்படுத்தவோ அந்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது. புகையிலை இல்லா சமுதாயம் ஒன்றை படைக்கும் வகையில், எடுக்கப்பட்ட இம்முடிவை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர். இந்தியாவில் இது சாத்தியம் ஆகுமா?
Similar News
News November 4, 2025
டாப் 7 பணக்கார இந்திய கிரிக்கெட் வீராங்கனைகள்

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு ஐசிசியின் பரிசுத் தொகையான ₹39.78 கோடியுடன் பிசிசிஐ அறிவித்துள்ள சிறப்பு தொகையான ₹51 கோடியும் சேர்த்து மொத்தம் ₹90 கோடி கிடைக்கப்போகிறது. இந்நிலையில், டாப்-7 பணக்கார இந்திய வீராங்கனைகளின் விவரங்களை போட்டோக்களாக கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.
News November 4, 2025
காலையில் எழுந்தவுடன் முதலில் செய்ய வேண்டியவை!

காலையில் எழுந்தவுடன் பின்பற்றும் சில பழக்கங்கள், அன்றைய நாள் முழுவதும் நம் மனநிலையில் நேர்மறையான தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். காலை பொழுதில் செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்களை இங்கே போட்டோக்களாக பட்டியலிட்டுள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.
News November 4, 2025
பொங்கல் விடுமுறை.. பஸ்களில் புக்கிங் தொடங்கியது

அரசு பஸ்களில் பொங்கல் தொடர் விடுமுறைக்கான டிக்கெட் புக்கிங் தொடங்கியுள்ளது. 90 நாள்களுக்கு முன்பான புக்கிங் வசதி இருப்பதால், சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக tnstc தளத்தில் முன்பதிவு செய்யலாம் என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. மேலும் பஸ்களில் புக்கிங் அதிகம் இருந்தால், சிறப்பு பஸ்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. ஜனவரி முதல் வாரத்தில் சிறப்பு பஸ்கள் அறிவிப்பு வெளியிடப்படும்.


