News November 2, 2025

IT ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஆனால் ஒரு கண்டிஷன்

image

தற்போதைய பணிநீக்கத்திற்கு பிறகு, மீண்டும் அடுத்த ஆண்டு புதிதாக ஆட்சேர்ப்பு நடத்தப்படும் என மைக்ரோசாஃப்ட் CEO சத்யா நாதெல்லா தெரிவித்துள்ளார். மேலும், தங்கள் நிறுவனத்தின் அனைத்து ஊழியர்களும் AI-ஐ பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயம் என்றும் அவர் கூறியுள்ளார். இதுவரை 6,000 பேரை பணிநீக்கம் செய்துள்ள மைக்ரோசாஃப்ட், அடுத்ததாக 9,000 பேரை பணிநீக்கம் செய்ய உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 3, 2025

தெரு நாய்கள் வழக்கில் 7-ம் தேதி தீர்ப்பளிக்கிறது SC

image

தெரு நாய்கள் தொல்லை குறித்த வழக்கை சுப்ரீம் கோர்ட் தானாக முன்வந்து விசாரித்து வருகிறது. இன்றைய வழக்கு விசாரணையில், நீதிமன்ற உத்தரவுப்படி <<18184221>>தமிழகம்<<>> உட்பட பல்வேறு மாநில தலைமை செயலாளர்கள் நேரில் ஆஜராகினர். மாநில அரசுகள் சார்பில் பிரமாண பத்திரங்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்நிலையில், அதை ஆய்வு செய்ய உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட், வரும் 7-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படும் என தெரிவித்துள்ளது.

News November 3, 2025

மீனவர்களுக்காக CM எழுதிய கடிதம்

image

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 35 மீனவர்களை மீட்கக்கோரி வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொடர் கைது நடவடிக்கைகளால் மீனவ சமூகத்திடையே அச்சம் ஏற்பட்டுள்ளது என்ற அவர், தற்போதைய நிலவரப்படி 114 மீனவர்கள் இலங்கையில் மாட்டிக்கொண்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். எனவே, அனைவரும் நாடு திரும்ப உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.

News November 3, 2025

‘Ra.One’ 2-ம் பாகம் உருவாகும்: ஷாருக்கான்

image

‘Ra.One’ படத்தின் 2-ம் பாகத்தில் நடிக்க ஆர்வத்துடன் இருப்பதாக ஷாருக்கான் தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை இயக்கிய அனுபவ் சின்ஹா 2-ம் பாகம் எடுக்க ஆர்வம் தெரிவித்து, அதற்கான நேரம் கூடி வரும்போது, 2-ம் பாகத்தை எடுப்போம் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், முதல் பாகம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், ரசிகர்கள் எதிர்பார்த்த அளவிற்கு படம் இல்லை என்பதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.

error: Content is protected !!