News November 2, 2025
வானத்தை வைத்து மேஜிக் காட்டிய நபர்!

2020 உலகமே லாக்டவுனில் வானத்தை பார்த்த படி மல்லாந்து படுத்திருந்தது. அப்படி வானத்தை பார்த்து கொண்டிருந்த கிறிஸ் ஜட்ஜ் என்பவருக்கு பயங்கரமான கிரியேட்டிவிட்டி உருவாகியுள்ளது. மேக கூட்டங்களை வெவ்வேறு உருவங்களாக வரைந்து காட்டி, உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார். அவரின் கைவண்ணத்தை மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பாருங்க.
Similar News
News November 3, 2025
Cinema Roundup: இந்திய மகளிர் அணிக்கு ரஜினி வாழ்த்து

*‘லெனின் பாண்டியன்’ படத்தின் மூலம் கங்கை அமரன் நடிகர் அவதாரம் எடுத்துள்ளார். *‘ஆட்டோகிராஃப்’ படம் வரும் 14-ம் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. *தனுஷ் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க உள்ளதாக தகவல். *இந்திய மகளிர் அணிக்கு ரஜினி வாழ்த்து. *‘பராசக்தி’ படத்தின் முதல் சிங்கிள் ப்ரோமோ நாளை வெளியாகும். *‘புதிய பாதை’ படத்தை ரீமேக் செய்ய உள்ளதாக பார்த்திபன் அறிவிப்பு.
News November 3, 2025
SIR பணிகளுக்கு தடைவிதிக்க கோரி திமுக மனு

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிகளுக்கு தடைவிதிக்க கோரி, திமுக சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ECI-ன் இந்த முன்னெடுப்பு அவசர கோலத்திலானது, பாரபட்சம் காட்டக்கூடியது மற்றும் ஜனநாயகத்திற்கு விரோதமானது என மனுவில் குறிப்பிட்டுள்ளது. முன்னதாக, SIR-ன் மூலம் பாஜகவிற்கு எதிரான வாக்காளர்களை நீக்க முயற்சிப்பதாக திமுக குற்றஞ்சாட்டியிருந்தது.
News November 3, 2025
BREAKING: நாளை மறுநாள் அனைத்து பள்ளிகளுக்கும்…

₹50,000 வரை பரிசுகளை வெல்லும் வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5(புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6 – 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 2 மாணவர்களை உள்ளடக்கிய 5 குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.


