News November 2, 2025
பெரம்பலூர்: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <
Similar News
News November 4, 2025
பெரம்பலூர்: 11.11.2025 இந்த தேதியை மறக்காதீர்!

பெரம்பலூர் மாவட்டத்தைச் சார்ந்த மாற்றுத்திறனாளிகளுக்கான, மாவட்ட ஆட்சியர் தலைமையில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 11.11.2025-ம் தேதி அன்று காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் தங்களது கோரிக்கைகளை மனுவாக வழங்கி பயன்பெறலாம் என ஆட்சியர் மிருணாளினி தகவல் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
பெரம்பலூர்: சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

பெரம்பலூர் மாவட்ட முன்னாள் படைவீரர்/ அவர்தம் குடும்பத்தினர் மற்றும் படைப்பிரிவில் பணிபுரியும் வீரர்களின் குடும்பத்தினர்களுக்கென சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் 12.11.2025-ம் தேதி அன்று காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட அரங்கத்தில், மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெறவுள்ளது என ஆட்சியர் தகவல் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
பெரம்பலூர்: இரவு ரோந்து போலீசார் விவரம்

பெரம்பலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.3) இரவு 10 மணி முதல் இன்று (நவ.4) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!


