News April 19, 2024
மின் உற்பத்தி நிறுவுதிறனில் தமிழகம் 3ஆவது இடம்

தேசிய அளவில் காற்றாலை, சூரியசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தி நிறுவுதிறனில் (22,161 மெகாவாட்) தமிழ்நாடு 3ஆவது இடம்பிடித்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட குறிப்பில், “மார்ச் மாத நிலவரப்படி, தமிழகத்தில் 2,301 மெகாவாட் திறனில் நீர்மின் நிலையங்கள் உள்ளன. சோலார் மின் உற்பத்தி நிறுவுதிறன் 8,211 மெகாவாட்டாக உள்ளது. சர்க்கரை ஆலைகளில் நிறுவுதிறன் 1,045 மெகாவாட்டாக உள்ளதெனக் கூறப்பட்டுள்ளது.
Similar News
News January 23, 2026
இந்தியாவுக்கு அடுத்தடுத்து அதிர்ச்சி

209 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி வரும் இந்திய அணி, ஓபனர்கள் 2 பேரின் விக்கெட்டையும் இழந்துள்ளது. சஞ்சு சாம்சன் 6 ரன்களிலும், அபிஷேக் சர்மா ரன் எதுவுமின்றியும் விக்கெட்டை பறிகொடுத்தனர். இதனால் இந்திய அணியை சரிவில் இருந்து மீட்க வேண்டிய பொறுப்பு, கேப்டன் சூர்யகுமார் கையில் உள்ளது. கடந்த போட்டியில் சற்று தடுமாறிய நியூசிலாந்து அணி வழக்கம்போல சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளது. இந்திய அணி 8/2 (2 Overs)
News January 23, 2026
நாளை பள்ளிகள் விடுமுறை.. கலெக்டர்கள் அறிவிப்பு

திருச்சி மாவட்டத்தில் நாளை வேலை நாளாக இருந்தாலும், பள்ளிகளுக்கு விடுமுறை என கலெக்டர் அறிவித்துள்ளார். டிச.30-ம் தேதி அளிக்கப்பட்ட உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், அரசு அலுவலகங்கள் மட்டும் இயங்கும். இதேபோல், மற்ற மாவட்டங்களுக்கும் குடியரசு தினம் உள்பட 3 நாள்கள் தொடர் விடுமுறை. அதேநேரத்தில், தென்காசியில் நவ.24-ல் விடப்பட்ட மழை விடுமுறையை ஈடுசெய்ய, நாளை அனைத்து பள்ளிகளும் இயங்கும். SHARE IT.
News January 23, 2026
அதிமுக கூட்டணியில் ஓபிஎஸ்.. டிடிவி தினகரன் சூசகம்

2026 தேர்தல் நெருங்கிவரும் நிலையில், திமுக, அதிமுக கூட்டணிகள் ஏறக்குறைய உறுதியாகிவிட்டன. OPS, ராமதாஸ், பிரேமலதா மட்டுமே தங்களது நிலைப்பாட்டை இதுவரை அறிவிக்கவில்லை. இந்நிலையில், OPS உடன் நட்புறவில் இருக்கும் TTV தினகரன், தங்களது (NDA) கூட்டணிக்கு அவர் வருவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவின் ஆட்சி அமைய வேண்டும் என விரும்பினால், OPS தங்களுடன் வர வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.


