News April 19, 2024
காங்கிரஸின் ‘ராகுல்யான்’ நிலை

தோல்வி பயத்தால் உத்தரப் பிரதேசத்தில் இருந்து கேரளாவுக்கு ராகுல் காந்தி இடம்பெயர்ந்துள்ளார் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கிண்டலாகக் கூறியுள்ளார். பத்தனம்திட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “பாஜக ஆட்சியில் சந்திரயான்-2 விண்கலம் நிலவில் நிலைநிறுத்தப்பட்டது. அதனை உலகம் கண்டு வியந்தது. கடந்த 20 ஆண்டுகளாக ‘ராகுல்யான்’ எங்கும் ஏவப்படவோ, தரையிறங்கவோ இல்லை” என்றார்.
Similar News
News January 26, 2026
ரஜினி, கமலுக்கு No சொன்னது ஏன்? லோகேஷ் விளக்கம்

ரஜினி, கமல் இணைந்து நடிக்கும் படத்தை லோகேஷ் இயக்குவார் என பேசப்பட்டது. ஆனால் அவர் அல்லு அர்ஜுனை இயக்க டோலிவுட் சென்றுவிட்டார். இதுகுறித்து மவுனம் கலைத்த லோகேஷ், ரஜினி-கமல் படத்திற்கு ஒன்றரை மாதங்கள் கதை எழுதியதாகவும், அக்கதை அவ்விருவருக்குமே பிடித்ததாகவும் குறிப்பிட்டார். ஆனால், இருவரும் வன்முறை குறைவான படத்தை எதிர்பார்த்ததால், தன்னால் அது சாத்தியமில்லை என்று விலகிவிட்டதாக விளக்கமளித்துள்ளார்.
News January 26, 2026
காங்., முன்னாள் எம்எல்ஏ சுந்தரம் காலமானார்

1996-2001, 2006-2011 ஆண்டுகளில் காரைக்குடி தொகுதி காங்., MLA-வாக இருந்த இருந்தவர் சுந்தரம். இவர் தனியார் ஹாஸ்பிடலுக்கு மருத்துவ பரிசோதனைக்கு சென்றுள்ளார். அங்கு எதிர்பாராதவிதமாக காரில் இருந்து இறங்கும் போது தவறி விழுந்து தலையில் படுகாயம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிகிச்சை அளித்தும், அது பலனளிக்காததால் ஹாஸ்பிடலில் உயிரிழந்தார். அவருக்கு காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறனர்.
News January 26, 2026
ஒரு வாரத்தில் NDA-வில் இணையும் புதிய கட்சி: நயினார்

தேமுதிகவும் ராமதாஸ் அணியும் எந்த கூட்டணியில் இணையப் போகிறார்கள் என்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதமாக உள்ளது. திமுக, அதிமுக என இரு கூட்டணிகளுமே தேமுதிக மற்றும் ராமதாஸுடன் பேசி வருவதாக தகவல் வருகிறது. இந்நிலையில், இன்னும் ஒருவாரத்தில் புதிய கட்சி ஒன்று NDA-வில் இணையும் என நயினார் நாகேந்திரன் சூசகமாக தெரிவித்துள்ளார்.


