News November 2, 2025

ராணிப்பேட்டை: டிப்ளமோ/டிகிரி போதும்- ரூ.59,700 சம்பளம்!

image

மத்திய அரசின் PDIL நிறுவனத்தில் சிவில், கணினி, டிசைன், மெக்கானிக்கல், தீ-பாதுகாப்பு உட்பட பல பிரிவுகளில் மொத்தம் 87 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு, டிப்ளமோ/டிகிரி முடித்த 18 முதல் 40 வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும், ரூ.26,600 – ரூ.59,700 வரை சம்பளம் வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள்<> இங்கு க்ளிக்<<>> செய்து, நவ.20ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஷேர் பண்ணுங்க!

Similar News

News November 3, 2025

ராணிப்பேட்டைக்கு வருகை தந்த துணை முதல்வர்

image

ராணிப்பேட்டை மாவட்டம், நகராட்சி வளாகத்தில் காமராஜர் தங்கிய இடத்தினை இன்று (நவ.03) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைத்தார். பின்னர் திருமண விழாவில் பங்கேற்க கிளம்பினார். உடன் அமைச்சர் ஆர் காந்தி, மாவட்ட ஆட்சித் தலைவர் சந்திரகலா, சோளிங்கர் சட்டமன்ற உறுப்பினர் முனிரத்தினம் மற்றும் பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

News November 3, 2025

ராணிப்பேட்டை: பைக் திருடர்கள் கைது

image

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் சமீப காலங்களில் தொடர்ந்து பைக் திருட்டு நடந்துவந்தது. இந்நிலையில் காவலர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைப்பட்டு, சோளிங்கர் சாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பெயரில் இருவரை விசாரித்தனர். பின் பேர்ணாம்பட்டை சேர்ந்த சந்துரு , ராகவேந்திரன் இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின் காவல்துறையினர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.

News November 3, 2025

ராணிப்பேட்டை: 2,708 பணியிடங்கள்! APPLY HERE!!

image

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக்<<>> செய்யவும். உங்க நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க!

error: Content is protected !!