News November 2, 2025

பிரபல நடிகர் காலமானார்

image

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற டெக்கி கார்யோ(72) காலமானார். பேட் பாய்ஸ், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட் என பிரபலமான பல படங்களில் இவர் நடித்துள்ளார். பிரான்ஸில் பிறந்த கார்யோ, த மெசஞ்சர், கிஸ் ஆஃப் டிராகன் உள்ளிட்ட பிரெஞ்சு படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP

Similar News

News November 3, 2025

அதிகார பகிர்வு கேட்பது காலத்தின் தேவை: KS.அழகிரி

image

கூடுதல் தொகுதி கேட்டாலே கூட்டணிக்கு சிரமம் வந்துவிடுமா? அப்படியென்றால், நாங்கள் எதுவுமே கேட்கக் கூடாதா என KS.அழகிரி வினவியுள்ளார். அதிகாரப் பகிர்வை கேட்பது காலத்தின் தேவையாக கருதுவதாக கூறிய அவர், கூட்டணி கட்சிக்கு எதுவும் கிடைக்காதென்றால் இதற்குப் பெயர் கூட்டணியே கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், கூட்டணியால் ஒருதரப்பு மட்டுமே வலிமை அடைந்துகொண்டே போவது சரியில்லை எனவும் கூறியிருக்கிறார்.

News November 3, 2025

SIR விவகாரத்தில் EPS-க்கும் சந்தேகம்: CM ஸ்டாலின்

image

SIR என்ற பெயரில் சதிச்செயலில் ஈடுபட EC முயல்வதாக CM ஸ்டாலின் கூறியுள்ளார். SIR விவகாரத்தில் EPS-க்கும் சந்தேகம் இருப்பதாகவும், ஆனால் அதை எதிர்க்காமல் ’பாஜகவின் பாதம் தாங்கி’ என்பதை அவர் நொடிக்கு ஒருமுறை நிரூபிப்பதாகவும் சாடியிருக்கிறார் மேலும், பாஜகவால் தமிழகத்தில் ஒன்றும் செய்யமுடியாது என்ற அவர், 2026-ல் திராவிட மாடல் 2.0 ஆட்சி அமைந்தது என ஹெட்லைன்ஸ் வரும் என உறுதியாக தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

அனில் அம்பானியின் ₹3,084 கோடி சொத்துக்கள் முடக்கம்

image

அனில் அம்பானி குழும நிறுவனங்களுக்கு சொந்தமான ₹3,084 கோடி மதிப்பிலான சொத்துகளை ED முடக்கியது. RHFL மற்றும் RCFL நிறுவனங்கள் மூலம் வங்கியில் இருந்து திரட்டப்பட்ட பொது பணத்தை முறைகேடாக கையாண்டதாக ED வழக்குப்பதிவு செய்தது. பண மோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள அனில் அம்பானியின் 40-க்கும் மேற்பட்ட சொத்துக்களை முடக்கி ED நடவடிக்கை எடுத்துள்ளது.

error: Content is protected !!