News November 2, 2025
பள்ளி மாணவர்களுக்கு மகிழ்ச்சியான நியூஸ்

நாடு முழுவதுமுள்ள அனைத்து CBSE பள்ளிகளுக்கான கல்வி செயல்திறன் அட்டை(ரிப்போர்ட் கார்டு) வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 10, +2 மாணவர்களின் கல்வி திறன் விவரங்கள் பாடவாரியாக ரிப்போர்ட் கார்டில் இடம்பெற்றிருக்கும். இதன்மூலம், மாணவர்கள் எந்தெந்த பாடத்தில் குறைவான மார்க் பெற்றுள்ளனர் என அறிந்து கூடுதல் கவனம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதனால், மாணவர்களின் கற்றல் திறன் மேம்படும். SHARE IT.
Similar News
News November 3, 2025
பாலியல் குற்றவாளிகளை காக்கும் அரசு: அண்ணாமலை

திமுக அமைச்சர்கள் முதல், காவல்துறை அதிகாரிகள் வரை பாலியல் குற்றவாளிகளுக்கு பாதுகாப்பு அளிப்பதாக அண்ணாமலை சாடியுள்ளார். <<18183470>>கோவை கல்லூரி மாணவி<<>> கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், பாலியல் குற்றங்களை தடுக்கவோ, பெண்களுக்கு பாதுகாப்பளிக்கவோ திமுக ஆட்சி தவறிவிட்டதாகவும், இதற்கு CM ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
ஹிந்தி படத்தில் ரம்யா கிருஷ்ணன்: ஹாரர் First Look!

எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனக்கென அடையாளத்தை பதிக்கும் நடிகைகளில் ஒருவர் ரம்யா கிருஷ்ணன். இவர் தற்போது ராம் கோபால் வர்மாவின் ஹாரர் ஹிந்தி படத்தில் இணைந்துள்ளார். ‘Police Station Mein Bhoot’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் மனோஜ் பாஜ்பாய், ஜெனிலியா ஆகியோர் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கின்றனர். இந்நிலையில், ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை ராம் கோபால் வர்மா SM-ல் பகிர்ந்துள்ளார்.
News November 3, 2025
கோப்பையை வெல்ல உதவிய சைலெண்ட் ஹீரோ!

இந்திய அணி கோப்பையை வெல்ல மாஸ்டர் மைண்டாக இருந்து செயல்பட்டவர் கோச் அமோல் மசும்தார். 1994- 2013 வரை முதல்தர கிரிக்கெட்டில் 11 ஆயிரம் ரன்களை விளாசிய அவருக்கு ஏனோ இந்தியா அணிக்காக விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை. சச்சினும் காம்பிளியும் 664 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை விளாசிய போது, அதே அணியில் இடம் பெற்றும், ஆட முடியாமல் போன அமோல், தான் இன்று இந்தியாவின் சைலெண்ட் ஹீரோ. இவரையும் கொண்டாடுவோம்.


