News November 2, 2025

6, 6, 6, 4, 4, 4, 4, 4, 4, 4… மரண அடி

image

இந்தியாவுக்கு எதிரான 3-வது T20-ல் ஆஸி.,யின் டிம் டேவிட் அதிரடி காட்டி வருகிறார். இதுவரை 3 சிக்ஸர், 7 பவுண்டரி பறக்கவிட்டுள்ளார். தற்போது 10 ஓவர்களில் ஆஸி., அணி 84/4 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட், இங்கிலிஸ், ஓவன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்துள்ள டிம் டேவிட் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளார். மேலும், T20I-களில் அவர் 1,000 ரன்களை கடந்துள்ளார்.

Similar News

News November 3, 2025

உடல்நல பாதிப்பின் போது சாப்பிடக்கூடாத உணவுகள்

image

உடல்நல பாதிப்பின் போது சில உணவுகளை சாப்பிடக்கூடாது என டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். ஏனெனில் சில நேரங்களில் நோயின் தன்மை தீவிரமடைய கூடும். குறிப்பாக சளி, இருமலால் அவதிப்படும் போது தவிர்க்க வேண்டிய உணவுகளின் விவரத்தை கொடுத்துள்ளோம். அவற்றை SWIPE செய்து பார்க்கவும்.

News November 3, 2025

அடுத்த 5 ஆண்டுகளில் 50 விண்வெளி திட்டங்கள்: இஸ்ரோ

image

CMS-03 செயற்கைக்கோள் திட்டமிட்ட நேரத்தில் பூமியின் சுற்றுவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் நாராயணன் தெரிவித்துள்ளார். அடுத்த 5 ஆண்டுகளில் 50 விண்வெளி திட்டங்களை செயல்படுத்த PM மோடி இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ‘ககன்யான்’ திட்ட பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

இந்திய மகளிர் அணிக்கு விராட் கோலி வாழ்த்து

image

மகளிர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு விராட் கோலி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்த வெற்றி பல தலைமுறைகளுக்கு ஊக்கமாக அமையும் என்றும், உங்களுடைய அச்சமற்ற ஆட்டத்தாலும், நம்பிக்கையாலும் ஒவ்வொரு இந்தியனையும் பெருமைப்பட செய்திருக்கிறீர்கள் எனவும் X-ல் அவர் பதிவிட்டுள்ளார். நீங்கள் எல்லா பாராட்டுகளுக்கும் தகுதியானவர்கள் என்று குறிப்பிட்டு, இந்த தருணத்தை முழுமையாக கொண்டாடுங்கள் என வாழ்த்தியுள்ளார்.

error: Content is protected !!