News November 2, 2025
தஞ்சை: இந்த எண்ணை SAVE பண்ணிகோங்க!

தஞ்சையில் மின்விபத்தினை தடுக்கும் வகையில் புகார் எண் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் உங்கள் பகுதியில் ஏதேனும் மின்கம்பங்கள் சேதாரமாகி அல்லது பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தால் மின்னகம் செல்போன் எண்-94987 94987, வாட்ஸ் ஆப் எண் -94984 86899, மின்தடை புகார் மையம்-94984 86901, உதவி என்ஜினீயர், மின்தடை புகார்-94984 86900 ஆகிய எண்ணை தொடர்பு கொண்டு புகாரளிக்கலாம். அனைவருக்கும் இதனை ஷேர் பண்ணுங்க
Similar News
News November 4, 2025
தஞ்சாவூரில் இதுவரை 2.24 லட்சம் டன் நெல் கொள்முதல்

தஞ்சாவூர் மாவட்டத்தில் நிகழ் குறுவை பருவத்தில் ஞாயிற்றுக்கிழமை (நவ.2) வரை 2.24 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை ரயில் மூலமாக 1.01 லட்சம் டன்னும், சாலை வழியாக 11 ஆயிரத்து 172 டன்னும் நெல் வெளி மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை 44 ஆயிரத்து 288 விவசாயிகளுக்கு ரூ. 541 கோடி பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
தஞ்சை அருகே பரிதாப பலி

பஞ்சநதிக்கோட்டையை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (47). மருத்துவ பிரதிநிதியாக வேலை செய்து வந்த இவர் சாமிப்பட்டி பிரிவு சாலையில் மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த அடையாளம் தெரியாத வாகனம் எதிர்பாராவிதமாக மோதியதில் படுகாயமடைந்தார். இதையடுத்து அவரை மீட்ட அக்கம்பக்கத்தினர் தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில் செல்லும் வழியிலேயே கோபாலகிருஷ்ணன் உயிரிழந்தார்.
News November 4, 2025
தஞ்சை: பிணமாக மிதந்த மாணவர் உடல்!

பாபநாசத்தை சேர்ந்தவர் சங்கரபாண்டி(19). இவர் கும்பகோணம் அரசு கல்லூரியில் படித்து வந்தார். சம்பவத்தன்று தனது நண்பர்களுடன் குடமுருட்டி ஆற்றின் படித்துறையில் குளித்து போது எதிர்பாராதவிதமாக சங்கரபாண்டி ஆற்றில் அடித்து செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கி மாயமானார். இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சங்கரபாண்டியை தேடி வந்தனர். இந்நிலையில் அவரது உடல் ஆற்றில் மிதந்து வர தீயணைப்பு வீரர்கள் அதனை மீட்டனர்.


