News November 2, 2025
செங்கல்பட்டு: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

செங்கல்பட்டு மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். இதில் ஊதியமாக மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.
Similar News
News November 3, 2025
செங்கல்பட்டு: 2,708 ஆசிரியர் பணியிடங்கள்! APPLY HERE

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க:<
News November 3, 2025
செங்கல்பட்டு: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க
News November 3, 2025
செங்கல்பட்டு: பெண்களிடம் அத்துமீறல்- கம்பி எண்ணும் காமுகன்!

பெரும்பாக்கம், எழில் நகரைச் சேர்ந்தவர் சந்திரசேகர்(45). திருமணம் ஆகாத இவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இதனிடையே சந்திரசேகர் கடந்த சில மாதங்களாக, சாலையில் செல்லும் பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளிடையே பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அப்பகுதியில் அச்சம் நிலவி வந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் சந்திரசேகரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


