News November 2, 2025
ராணிப்பேட்டைக்கு வருகை தரும் துணை முதல்வர்

ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு நாளை (நவ.3) தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வருகை புரிகிறார். இதில் அரசு சார்பில் 23,000 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். தொடர்ந்து ராணிப்பேட்டையில் காமராஜர் தங்கியிருந்த நினைவு இல்லத்தை திறந்து வைக்க உள்ளார். மேலும், தனியார் பள்ளியில் உள்விளையாட்டு அரங்கத்தை திறந்து வைக்க உள்ளார். அந்த அரங்கத்தை அமைச்சர் ஆர்.காந்தி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
Similar News
News November 3, 2025
ராணிப்பேட்டை: பைக் திருடர்கள் கைது

ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் சமீப காலங்களில் தொடர்ந்து பைக் திருட்டு நடந்துவந்தது. இந்நிலையில் காவலர் அசோகன் தலைமையில் தனிப்படை அமைப்பட்டு, சோளிங்கர் சாலை வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்தின் பெயரில் இருவரை விசாரித்தனர். பின் பேர்ணாம்பட்டை சேர்ந்த சந்துரு , ராகவேந்திரன் இருவரும் பைக் திருட்டில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது. பின் காவல்துறையினர் இருவரையும் சிறையில் அடைத்தனர்.
News November 3, 2025
ராணிப்பேட்டை: 2,708 பணியிடங்கள்! APPLY HERE!!

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 1) மொத்த பணியிடங்கள்: 2,708, 2) கல்வித் தகுதி: PG, Ph.D, NET, SLET, SET. 3) சம்பளம்: ரூ.57,700-ரூ.1,82,400 வழங்கப்படும். 4) விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.10. 5) விண்ணப்பிக்க: <
News November 3, 2025
ராணிப்பேட்டை: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ – சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம், பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம் போதும். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க’


