News November 2, 2025

இந்தாண்டு இறுதிக்குள் வருகிறது பறக்கும் கார்!

image

இந்தாண்டு இறுதிக்குள் பறக்கும் காரை அறிமுகப்படுத்தி டெமோ காட்டவுள்ளதாக SpaceX தலைவர் எலான் மஸ்க் அறிவித்துள்ளார். இந்த டெமோ நிகழ்ச்சி தொழில்நுட்ப வரலாற்றில் மறக்க முடியாத ஒன்றாக அமையும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இருப்பினும், இது பறக்கும் கார் தானா அல்லது என்னவென்பதை பொறுத்திருந்து பாருங்கள் என்றும் சஸ்பென்ஸ் வைத்துள்ளார். என்னவா இருக்கும்?

Similar News

News November 3, 2025

திருவள்ளூர் அரசு நிறுவன எண்களை சேவ் பண்ணிக்கோங்க

image

திருவள்ளூர் தலைமை அஞ்சலகம்-044-27660233, அம்பத்தூர் அஞ்சலகம்-044-26245533, திருவள்ளூர் தலைமை மருத்துவமனை-044-27660242, திருத்தணி மருத்துவமனை-044-27880588, அலகாபாத் வங்கி-9824899942, கனரா வங்கி-9444722761, இந்தியன் வங்கி-9444987061, IOB-9600167604, SBI-9600070941,திருத்தணி அரசு கல்லூரி-044-27885212, திருவள்ளூர் ஆசிரியர் பயிற்சி நிறுவனம்-044-27620239. *கட்டாயம் உதவும். நண்பர்களுக்கும் பகிருங்கள்*

News November 3, 2025

வெள்ளி விலை ₹2,000 உயர்ந்தது

image

கடந்த மாத தொடக்கத்தில் கிடுகிடுவென உயர்ந்து மாத இறுதியில் சரிவை கண்ட வெள்ளி, நவ. மாதம் தொடங்கியது முதலே உயர்ந்து வருகிறது. அந்த வகையில், இன்று(நவ.3) கிராமுக்கு ₹2 அதிகரித்து ₹168-க்கும், பார் வெள்ளி ₹1 கிலோவுக்கு ₹2,000 அதிகரித்து ₹1,68,000-க்கும் விற்பனையாகிறது. வெள்ளி விலை இனி வரும் நாள்களில் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளதால், கடந்த மாதம் வாங்கி குவித்தவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

News November 3, 2025

திரிணாமுல் MLA மீது திடீர் தாக்குதல்

image

மே.வங்கத்தில் திரிணாமுல் MLA ஜோதிப்ரியா மல்லிக் வீட்டில், நேற்று இரவு புகுந்த இளைஞர் ஒருவர் அவரை சரமாரியாக தாக்கியுள்ளார். மல்லிக் கூச்சலிட்டத்தை அடுத்து, பாதுகாப்பு ஊழியர்கள் விரைந்து வந்து, இளைஞரை பிடித்து போலீஸிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அபிஷேக் தாஸ் என்ற அந்த இளைஞர், வேலைக்காக மல்லிக்கிடம் பேச வந்ததாக கூறியுள்ளார். அவர் ஏற்கெனவே மனநல சிகிச்சைக்கு பெற்று வருவதும் தெரியவந்துள்ளது.

error: Content is protected !!