News November 2, 2025
விழுப்புரத்தில் வசமாக சிக்கிய குற்றவாளி!

சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவா் பாலாஜி (29). இவா் மீது விழுப்புரம் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளன. குற்றச் சரித்திரப் பதிவேடும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒரு வழக்கில் சாட்சியாக உள்ள சித்தேரிக்கரை பகுதியைச் சோ்ந்தவருக்கு பாலாஜி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இது குறித்த புகாரின்பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து பாலாஜியை வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
Similar News
News November 4, 2025
விழுப்புரம்: நீரில் மூழ்கி சிறுவன் பலி!

விழுப்புரத்தைச் சோ்ந்த சிறுவன் தனது நண்பா்களுடன் எல்லீஸ் சத்திரம் அணைக்கட்டில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா். விழுப்புரம் பானாம்பட்டு ராமமூா்த்தி நகரைச் சோ்ந்த விமல் என்பவரின் மகன் சுஜித் (14). விழுப்புரத்தில் உள்ள பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வந்தாா் . அணைக்கட்டு பகுதியில் தனது நண்பா்களுடன் குளித்துக்கொண்டிருந்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
News November 4, 2025
விழுப்புரத்தில் இரவு ரோந்து விவரம்

விழுப்புரம் மாவட்டத்தில் இன்று இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.
News November 3, 2025
விழுப்புரம்: தவெக தென்மேற்கு மாவட்ட நிர்வாகிகள் அறிவிப்பு

விழுப்புரம் மாவட்டம், தவெக தென்மேற்கு மாவட்ட இளைஞர் அணியில் புதிய நிர்வாகிகள், தவெக தலைவர் விஜய் இன்று(நவ.03) மாலை அறிவித்துள்ளார். அதன்படி, மாவட்ட செயலாளராக வடிவேல், அமைப்பாளராக பிரித்திவிராஜ், இணை அமைப்பாளராக 10 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய மாவட்ட நிர்வாகிகளுக்கு கழகத் தோழர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


