News November 2, 2025

உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அதிரடி!

image

உளுந்தூர்பேட்டை டிஎஸ்பி அசோகன் திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரோந்து பணியில் ஈடுபட்ட போது எறஞ்சி என்ற இடத்தில் அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை மடக்கி சோதனை செய்ததில் அரசு அனுமதியின்றி கூழாங்கற்கள் ஏற்றிச் சென்றது தெரியவந்தது. இதனையடுத்து அந்த லாரியை பறிமுதல் செய்து லாரி ஒட்டுனர் விருதாச்சலம் அடுத்த புதுப்பேட்டையை சேர்ந்த அஜித்குமார் என்பவரை இன்று (நவ.1) அதிகாலை கைது செய்தனர்.

Similar News

News November 3, 2025

கள்ளக்குறிச்சி: ரேஷன் ஊழியர்கள் மீது புகார் செய்வது எப்படி?

image

ரேஷன் கடைகளில் பொருட்களை சரியாக வழங்காமல் இருப்பது, சோப்பு, பிஸ்கஸ்ட் போன்ற பொருட்களை கட்டாயப்படுத்தி வாங்க சொல்வது போன்ற செயல்களில் ரேஷன் கடை ஊழியர்கள் ஈடுபட்டால் 1800 425 5901 என்ற TOLL FREE எண் (அ) கள்ளக்குறிச்சி மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவகத்தில் புகார் செய்யலாம். உங்க நண்பர்களுக்கும் ஷேர் பண்ணி அவங்களுக்கும் தெரிய படுத்துங்க.

News November 3, 2025

கள்ளக்குறிச்சி: அரசு பஸ் கண்டக்டர் சடலமாக மீட்பு

image

மணம்பூண்டியைச் சேர்ந்தவர் பெரியநாயகசாமி மகன் ஜோசப் அந்தோணி ராஜ்(48). திருக்கோவிலுார் அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் கண்டக்டராக பணிபுரிந்தார். நேற்று முன்தினம் (நவ.01) வீட்டில் இருந்து அவர் காரை எடுத்துக் கொண்டு அத்திப்பாக்கம் சென்றவர் வீடு திரும்பவில்லை. பின் தகவலரிந்து போலீசார் அத்திப்பாக்கம் சாலையோரம் பார்த்தபோது அந்தோணி ராஜ் இறந்த நிலையில் கிடந்தார். இதனை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

News November 3, 2025

கள்ளக்குறிச்சி: புகையிலை கடத்திய மாணவர் கைது

image

திருவண்ணாமலை – திருக்கோவிலுார் மார்க்கத்தில், மணலுார் பேட்டை சப் இன்ஸ்பெக்டர் ராமதாஸ் மற்றும் போலீசார் குலதீபமங்கலம் பஸ் நிறுத்தத்தில் வாகன நேற்று (நவ.02) தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, ஒரு ஹூண்டாய் ஐ20 காரை நிறுத்தி சோதனையிட்டனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட 25 கிலோ ஹான்ஸ் புகையிலை பொருட்கள் இருந்தது. இதன் மதிப்பு ரூ.25 ஆகும். இதனை அப்பகுதி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

error: Content is protected !!