News November 2, 2025
தேனியில் நாய் கடியால் 10,000 பேர் பாதிப்பு

தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனைக்கு நாய் கடியால் ஆண்டுக்கு 1,750 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதே போல் பெரியகுளம், கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஆண்டுக்கு 10,000 பேர் நாய் கடியால் பாதித்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கால்நடைத்துறை 2022-ன் கணக்கின்படி மாவட்டத்தில் 25,000 தெரு நாய்களும், 15,000 வளர்ப்பு நாய்கள் உள்ளதாக தகவல்.
Similar News
News November 4, 2025
தேனி: இன்று முதல் வீடு தேடி வரும் அதிகாரிகள்

வாக்காளர் திருத்த பட்டியல் சிறப்பு தீவிர முகாம் இன்று(நவ.4) முதல் 04.12.2025 வரை வீடுவீடாக சென்று கணக்கு எடுக்கும் பணிகள் நடைபெற உள்ளது என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான ரஞ்ஜீத் சிங்தெரிவித்துள்ளார். மேலும் உதவிக்கு 1950 என்ற எண்ணில் பொதுமக்கள் அழைக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News November 4, 2025
தேனி: மாட்டுவண்டி மீது கார் மோதி விபத்து

கம்பம் பகுதியை சேர்ந்த மாரிசாமி (42) நேற்று முன்தினம் (நவ.2) கம்பம் பைபாஸ் சாலையில் இரட்டை மாட்டுவண்டியில் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக ராஜன் என்பவர் ஓட்டி வந்த கார், இவரது மாட்டு வண்டி மீது மோதியது. இந்த விபத்தில் மாரிச்சாமி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் மாடுகளும் காயமடைந்த நிலையில் கம்பம் தெற்கு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
News November 4, 2025
தேனியில் மின்தடை பகுதிகள் அறிவிப்பு

தேனி மாவட்டத்தில் தேனி, காமாட்சிபுரம்,மார்க்கையன்கோட்டை , வீரபாண்டி, தேவாரம், கடமலைக்குண்டு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை(நவ.5) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் மேற்கண்ட துணைமின் நிலையங்களில் இருந்து மின்விநியோகம் பெரும் பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


