News November 2, 2025

புதுவை: இனி வாட்ஸ் ஆப் மூலம் ஆதார் அட்டை!

image

புதுவை மக்களே இனி ஆதார் கார்டு வாங்க அலைய வேண்டாம். இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) வாட்ஸ்அப் மூலம் ஆதாரைப் பதிவிறக்கம் செய்யும் வசதியை வழங்கியுள்ளது. முதலில் உங்கள் தொலைபேசியில் MyGov உதவி மைய எண்ணை (9013151515) சேமிக்க வேண்டும். இந்த எண்ணுக்கு வாட்ஸ்ஆப் வழியாக Hi என்று ஆங்கிலத்தில் Message அனுப்பினால் போதும். அதுவே வழிகாட்டும். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணி தெரியப்படுத்துங்க.

Similar News

News November 4, 2025

புதுவையில் இன்று மின் தடை அறிவிப்பு

image

புதுவையில் பராமரிப்பு பணிகள் காரணமாக மரப்பாலம் துணை மின் நிலையம், கோர்க்காடு துணை மின் நிலையங்களில் இருந்து செல்லும் உயரழுத்த மின் பாதைகளில் இன்று (நவ.04) மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அந்த வகையில் இன்று காலை 10 மணி முதல் மாலை 4 வரை தில்லையாடி, வித்யாலயா நகர், தியாகி சுப்புராயன் நகர், இந்திரா நகர் மற்றும் இன்னும் சில பகுதிகளில் மின் தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 4, 2025

புதுவை: ஜிப்மர் மருத்துவமனை இயங்காது

image

புதுவை ஜிப்மர் நிர்வாகம் செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசின் விடுமுறை தினமான குருநானக் ஜெயந்தி முன்னிட்டு, நாளை 5ம் தேதி ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் சிகிச்சை பிரிவு இயங்காது. எனவே வெளிப்புற சிகிச்சைக்கு வருவதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும். மற்றபடி அவசர சிகிச்சை பிரிவு அனைத்தும் இயங்கும் என கூறப்பட்டுள்ளது.

News November 3, 2025

புதுச்சேரி: தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

image

புதுச்சேரி தலைமை தேர்தல் அதிகாரி ஜவகர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, SIR என்கிற சிறப்பு வாக்காளர் பட்டியல் சரி பார்க்கும் பணி நடைபெற உள்ளது. இது
(டிசம்பர் 4) வரை வீடு வீடாக சென்று, வாக்காளர் பட்டியல் சரி பார்ப்பார்கள். வாக்காளர்கள், பிறந்தநாள் ஆவணம், தொலைபேசி எண், தற்போதைய புகைப்படம் வைத்துக்கொள்ள வேண்டும். Form 6, Form 8 ஆகியவை தொகுதி மாறி உள்ள வாக்காளர்களுக்கு வழங்கப்படும் என்று கூறினார்.

error: Content is protected !!