News November 2, 2025
சென்னை: LIC அருகில் உள்ள பழைய கட்டடம் பற்றி தெரியுமா?

சென்னை, அண்ணா சாலை LIC அருகில் இருக்கும் இடிந்த கட்டடத்தை நம்மில் பலரும் பார்த்ததுண்டு. அதன் வரலாறு உங்களுக்கு தெரியுமா? 1868ல் சென்னை வந்த மருத்துவர் W.E.ஸ்மித் இந்த இடத்தில் 1897ல் மருந்து விற்பனையகத்தை அமைத்தார். அதுதான் நாம் பார்க்கும் தற்போதைய கட்டடம். இவர் இதனை 1925ல் ஸ்பென்ஸருக்கு விற்றுவிட, 1934-ல் பாரத் இன்சூரன்ஸ் கம்பெனி இதனை வாங்கியது. பின், இந்த பில்டிங் 1957-ல் LIC வசம் வந்தது. ஷேர்!
Similar News
News November 3, 2025
சென்னை 3ஆம் இடம் பிடித்து அதிர்ச்சி- SO SAD!

நடப்பாண்டுக்கான மத்திய அரசின் ஸ்வச் பாரத் மிஷன் மற்றும் வருடாந்திர ஸ்வச் சர்வேஷன் கணக்கெடுப்பு நடைபெற்றது. மேலும், இந்தியாவின் அசுத்தமான நகரங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் இந்தியாவிலேயே சென்னை 3ஆம் இடத்தில் உள்ளது. மேலும், மதுரை முதல் இடத்தில் உள்ளது. தமிழ் நாடின் 2 நகரங்கள் முதல் 3 இடங்களில் உள்ளன. இதுகுறித்து உங்க கருத்து என்ன கமெண்ட்ல சொல்லுங்க. மத்தவங்களும் தெரிஞ்சிக்க ஷேர் பண்ணுங்க.
News November 3, 2025
சென்னையில் மின்நுகர்வோர் கூட்டம்

மயிலாப்பூர், தண்டையார்பேட்டை, அம்பத்தூர் மற்றும் கே.கே.நகர் கோட்டங்களில் நாளை (நவ.04) காலை 11 மணிக்கு மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் பொதுமக்கள் கலந்து கொண்டு மின்சாரத் துறை சார்ந்த குறைகளை தெரிவித்து நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என சென்னை மையம், மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு ஆகிய மின் பகிர்மான வட்டங்களின் மேற்பார்வை பொறியாளர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.
News November 2, 2025
சென்னையில் இரவு ரோந்து பணி விவரம்

சென்னையில் இன்று (02.11.2025) இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ள காவலர்களின் விவரங்கள் மேலே உள்ள புகைப்படத்தில் பகுதி வாரியாக உள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள காவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். தொடர்பு எண்களும் மேலே கொடுக்கப்பட்டுள்ளன. இதை SHARE செய்யவும்.


