News November 2, 2025
ஆத்துார் அருகே தண்ணீர் தொட்டியில் விழுந்த மூதாட்டி பலி!

ஆத்துார் தென்னங்குடிபாளையம் ஊராட்சி அய்யனார்பாளையத்தை சேர்ந்த, மஞ்சுளா, நேற்று, வீட்டின் முன் நிலத்தில் பதித்து வைத்துள்ள, 10 அடி ஆழ தொட்டியில், குடத்தில் தண்ணீர் எடுக்க முயன்றார். அப்போது தவறி, தொட்டிக்குள் விழுந்த அவருக்கு, மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத் தினர், தொட்டியில் இருந்த தண்ணீரை எடுத்து வெளியேவிட்டு பார்த்தபோது, மஞ்சுளா இறந்திருந்தது தெரிந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.
Similar News
News November 3, 2025
சேலம்: ஆதாருடன் பான் கார்டை இணைக்க எளிய வழி!

சேலம் மக்களே, மத்திய அரசு பான்கார்டுடன் ஆதாரை டிசம்பர்.31க்குள் இணைக்க வேண்டும் என அறிவுறுத்தி உள்ளது.
1. <
2. PAN, Aadhaar எண், பெயர் போன்ற விவரங்கள் சரியாக பதிவு செய்யுங்க.
3. Aadhaar OTP மூலம் உறுதிசெய்து “Submit” செய்யவும். இணைப்பு சீராக முடிந்தால் “Link Successful” தோன்றும். அவ்வளவுதான்! இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.
News November 3, 2025
திருவண்ணாமலை செல்ல ரெடியா!

ஐப்பசி பவுர்ணமி தினத்தையொட்டி, சேலம் கோட்ட அரசு போக்குவரத்துக்கழகம் சார்பில் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு கிரிவலம் செல்ல நவம்பர் 4, 5ல் 200 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன. சேலம், ஆத்தூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களூரு நிலையங்களில் இருந்து பஸ்கள் புறப்படும். முன்பதிவு www.tnstc.in இணையதளம் அல்லது செயலி வழியாக செய்யலாம் என கோட்ட நிர்வாக இயக்குனர் குணசேகரன் தெரிவித்தார்.
News November 3, 2025
சேலம்: வீட்டு வரி பெயர் மாற்ற வேண்டுமா?

சேலம் மக்களே.. உங்க வீட்டு வரி பெயர் மாற்றத்திற்கு அலைச்சல் வேண்டாம். அதற்கு எளிய வழி இருக்கு! உங்க அலைச்சலை போக்க https://tnurbanepay.tn.gov.in/LandingPage.aspx# என்ற இணையதளம் சென்று உங்க Add Assesment-ல் சொத்துகளை சேர்த்து பெயர் மாற்றத்தை தேர்வு செய்து சொத்து ஆவணங்களை சமர்பியுங்க. அதிகாரிகள் ஆவணங்களை சரிபார்த்த பின் வீட்டு வரி பெயர் 15-30 நாட்களில் மாறிவிடும். இத்தகவலை SHARE பண்ணுங்க.


