News November 2, 2025
ஈரோடு: 12வது போதும்.. ரூ.30,000 சம்பளம்!

ஈரோடு மக்களே, தமிழகத்தில் உள்ள நபார்டு வங்கியின் நிதி சேவை நிறுவனத்தில், வாடிக்கையாளர் சேவை அதிகாரி (Customer Service Officer – CSO) பணியிடங்கள் நிரப்ப உள்ளது. இதற்கு 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மாதம் ரூ.20,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். மேலும் விவரங்கள் மற்றும் விண்ணப்பிக்க nabfins.org/Careers/ என்ற முகவரியில் அணுகலாம். கடைசி தேதி 15.11.2025 ஆகும். (SHARE)
Similar News
News November 4, 2025
ஈரோடு: இன்றைய உங்களுடன் ஸ்டாலின் முகாம் இடங்கள்

ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இதில் பயனாளிகள் தங்கள் மனுவினை பதிவு செய்து வரும் நிலையில் விரைவாக பயனடைந்து வருகின்றனர். அதன் படி,இன்றைய ஈரோடு மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் கீழ் கண்ட இடங்களில் நடைபெறுகிறது. அந்தந்த பகுதி மக்கள் கலந்து கொண்டு மனுவினை அளிக்கலாம்.
News November 3, 2025
சென்னிமலை அருகே சுவர் இடிந்து விழுந்து மூதாட்டி பலி

சென்னிமலை அருகே ஒட்டவலசு , முத்தம்மாள்,60;, சொந்தமாக ஆடுகள் வைத்து மேய்த்து வருகிறார். அவரது வீட்டை ஒட்டியவாறு மண் சுவர்களுடன் கூடிய ஆட்டு கொட்டகை உள்ளது. இன்று மதியம் முத்தம்மாளின் பக்கத்து வீடு மாயம்மாள் ,முத்தம்மாள் வீட்டுக்கு சென்று பார்த்த போது முத்தம்மாள் ஆட்டு கொட்டகை சுவர் இடிந்து விழுந்து இறந்து போனநிலையில் கிடந்ததை பார்த்துள்ளார். புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் விசாரணை .
News November 3, 2025
ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, பகுதி நேர வேலைவாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறையினர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.


