News November 2, 2025
அரியலூர்: 1000 ஆண்டு பழமையான கோயில்

அரியலூர் மாவட்டத்தில் உள்ள உடையவர் தீயனூர் கிராமத்தில் அமைந்துள்ள ஜமதக்னீஸ்வரர் கோயில், இரண்டாம் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்ட 1000 ஆண்டுகள் பழமையான கோயிலாகும். மேலும், இக்கோயில் சப்த ரிஷிகளில் ஒருவரான ஜமதக்னி முனிவர் தவம் செய்த இடமாக கருதப்படுகிறது. இக்கோயிலில் வழிபாடு செய்தால் வயிற்றுவலி, கண் நோய் போன்ற பல்வேறு நோய்களிலிருந்து விடுபடலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. SHARE IT.
Similar News
News November 3, 2025
அரியலூர் மாவட்டம்- ஓர் பார்வை

சாதிவாரி கணக்கெடுப்புடன் கூடிய மக்கள் தொகை கணக்கெடுப்பு விரைவில் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கடந்த 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பில் அரியலூர் மாவட்டத்தின் முக்கிய தரவுகள் குறித்து அறிந்து கொள்வோம்.
▶️ மொத்த மக்கள் தொகை – 754,894
▶️ ஆண்கள் – 374,703
▶️ பெண்கள்- 380,191
▶️ படிப்பறிவு – 71.34 %
▶️ மொத்த பரப்பளவு – 1949 ச.கி.மீ
SHARE NOW!
News November 3, 2025
அரியலூர்: இரவு ரோந்து காவலர்களின் விபரம்

அரியலூர் மாவட்டம், முழுவதும் இரவு நேரங்களில் குற்ற சம்பவங்களை தடுப்பதற்கும் குற்றவாளிகளை பிடிப்பதற்கும் தினந்தோறும் இரவு ரோந்து பணிக்கு காவலர்கள் செல்வது வழக்கம். அதன்படி (நவ.02) இரவு ரோந்து பணிக்கு செல்லும் காவலர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களை வெளியிடப்பட்டுள்ளது. அவசர காலத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை அழைக்கலாம் அல்லது 100ஐ டயல் செய்யவும். இத்தகவலை ஷேர் செய்யுங்கள்!
News November 3, 2025
அரியலூர்: குறைதீர் நாள் கூட்டம் அறிவிப்பு

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், பொதுமக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் (நவ.3) நாளை நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, மாற்றுத்திறனாளி உதவித்தொகை, தொழில்கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள், பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


