News November 2, 2025

ALERT: வங்கக்கடலில் மீண்டும் உருவானது புயல் சின்னம்!

image

மேலடுக்கு சுழற்சியால் மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று காலை 5.30 மணிக்கு புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக IMD தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மியான்மரை நோக்கி நகரக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய கிழக்கு வங்கக் கடல், அந்தமான் கடல் பகுதிகளுக்கு நவ.5-ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Similar News

News November 3, 2025

BREAKING: நள்ளிரவில் அதிரடி கைது

image

நள்ளிரவில் கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்கள் 35 பேரை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், 4 படகுகள், மீன்கள், வலைகளையும் பறிமுதல் செய்துள்ளதால் மீனவர்களின் குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் காங்கேசன் துறைமுக முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 3, 2025

கூட்ட நெரிசல்தான் காரணம்: மன்னிப்பு கேட்ட ஷாருக்

image

கூட்ட நெரிசல் மரணங்கள் நாட்டை உலுக்கிய நிலையில், நடிகர் ஷாருக்கான் இந்த வருட பிறந்தநாளில் தனது ரசிகர்களை சந்திக்கவில்லை. இது குறித்து X தளத்தில், ரசிகர்களை பார்க்க வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியதால், காத்திருந்த அனைத்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்கிறேன். இந்த முடிவை எடுக்க, கூட்டநெரிசல் பிரச்னையே காரணம். உங்களின் பாதுகாப்புக்காக தான் இந்த முடிவை எடுத்தேன் எனவும் பதிவிட்டுள்ளார்.

News November 3, 2025

நீதிமன்றத்தை நாடுகிறார் செங்கோட்டையன்

image

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து செங்கோட்டையன் இன்று நீதிமன்றத்தை நாட திட்டமிட்டுள்ளார். நோட்டீஸ் கூட வழங்காமல் கட்சி விதிகளை மீறி கட்சியிலிருந்து நீக்கப்பட்டதாக செங்கோட்டையன் குற்றஞ்சாட்டினார். ஆனால், கட்சி விதிகளின் அடிப்படையில்தான் நீக்கப்பட்டதாக இபிஎஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையில் நேற்று இரவு சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்த செங்கோட்டையன், இன்று வழக்கு தொடரவிருக்கிறார்.

error: Content is protected !!