News November 2, 2025

ஈரோடு: What’sApp-ல் வரும் ஆபத்து

image

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Similar News

News November 3, 2025

ஈரோடு மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

image

வெளிநாட்டில் வேலைவாய்ப்பு, பகுதி நேர வேலைவாய்ப்பு என உங்களது அலைபேசிக்கு வரும் அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்றவற்றில் ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக காவல்துறையினர் எச்சரிக்கை விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார்கள்.

News November 3, 2025

ஈரோடு மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

ஈரோடு மாவட்டத்தில் நாளை முதல் 3 தினங்கள் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. இதில் 13 துறைகளைச் சார்ந்த 43 சேவைகள் வெளிப்படை தன்மையோடு வழங்கப்பட உள்ளது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம் ஈரோடு மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் வெளியிட்டுள்ளார். குறிப்பாக புதிய ரேஷன் கார்டு மகளிர் உரிமை திட்டம் ஜாதி சான்றிதழ் போன்றவைகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

News November 3, 2025

போதை உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும்:போலீசார் அறிவுறை!

image

போதைப் பொருட்களின் ஆபத்து குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் போஸ்டர் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் “ஒரு நிமிடம் உங்கள் வாழ்க்கையை மாற்றி விடும்..! Say No To Drug” என்ற வாசகத்துடன் கூடிய விழிப்புணர்வுச் சுவரொட்டிகளை ஈரோடு போலீசார் வெளியிட்டுள்ளனர்.

error: Content is protected !!