News November 2, 2025

நாகை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <>க்ளிக் <<>>செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

Similar News

News November 3, 2025

நாகை: மீனவர் விபரீத முடிவு!

image

நாகூரை சேர்ந்தவர் மணிஷ் (வயது 28), மீனவரான இவருக்கு சில நாட்களாகவே மன உளைச்சல் இருந்து வந்த தாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மணிஷ் நேற்று முன்தினம் வீட்டில் உள்ள அறையில் ஜன்னலில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். இதையடுத்து நாகூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்த விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 3, 2025

நாகை: இரவு ரோந்து செல்லும் போலீசார் விவரம்

image

நாகை மாவட்டத்தில் (நவ.02 ) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை ரோந்து பணிக்கு காவல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம், அல்லது 100ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் காவலர்கள் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

நாகை: 1,00,162 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்

image

நாகப்பட்டினம், 117 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கே.எம்.எஸ் 2025-2026 ஆம் ஆண்டு குறுவை பருவத்தில் (03.09.2025) முதல் (01.11.2025) வரை 1,00,162 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் நேற்றைய தினம் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 3,297 மெ.டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. மாவட்ட முழுவதும் கொள்முதல் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!