News November 2, 2025

தூத்துக்குடியில் வீடு தேடி வரும் ரேஷன் பொருட்கள்

image

70 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு அவர்கள் இல்லம் தேடிச் சென்று நியாயவிலைக் கடை பணியாளர்கள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் தாயுமானவர் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த மாதத்திற்கான தாயுமானவர் திட்டப்படி தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (நவ. 3) மற்றும் நாளை மறுநாள் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார்.

Similar News

News November 3, 2025

தூத்துக்குடி பெற்றோர்களுக்கு எச்சரிக்கை

image

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை விடுத்துள்ள விழிப்புணர்வு எச்சரிக்கையில் கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக உங்களை தொடர்பு கொள்வார்கள். அவ்வாறு தொடர்பு கொள்பவர்கள் முன்பணம் வேண்டும் அதற்கு உங்கள் க்யூ ஆர் கோர்டு அனுப்பி பணம் கேட்பார்கள். எனவே இத்தகைய மோசடி அலைபேசி அழைப்புகளை நம்பி பெற்றோர்கள் ஏமாற வேண்டாம் என அதில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. SHARE!

News November 2, 2025

தூத்துக்குடி: பக்தர்கள் கவனத்திற்கு!

image

நவம்பர் 16 முதல் கார்த்திகை மாதம் தொடங்குகிறது. சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு (Virtual Q) கட்டாயம் ஆக்கபட்டுள்ளது. தரிசன முன்பதிவுகள் தற்போது தொடங்கியுள்ளது. சிரமமின்றி தரிசனம் செய்ய இங்கு க்ளிக் செய்து அக்கவுண்ட் உருவாக்கி உங்க விவரங்களை பதிவிட்டு முன்பதிவு பண்ணுங்க. இதில் தரிசன நேரம், வாகன நிறுத்தம், பிரசாதங்கள் என எல்லாமே தெரிஞ்சுக்கலாம். மற்றவர் தெரிஞ்சுக்க SHARE பண்ணுங்க.

News November 2, 2025

தூத்துக்குடி: நிலம் வாங்க அரசு வழங்கும் ரூ.5 லட்சம்

image

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் (அ) அதிகபட்சமாக ரூ.5 லட்சம் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையத்தில் பார்க்கலாம் (அ) தூத்துக்குடி மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க

error: Content is protected !!