News November 2, 2025
சற்றுமுன்: பிரபல தமிழ் நடிகர் கவலைக்கிடம்

பிரபல இயக்குநரும், நடிகருமான வி.சேகர் உடல்நிலை மேலும் கவலைக்கிடமாகியுள்ளது. 1990-ல் ‘நீங்களும் ஹீரோதான்’ படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான இவர், பல படங்களை இயக்கியதோடு, ஒருசில படங்களில் நடித்துள்ளார். வீட்டில் திடீரென மயங்கி விழுந்த வி.சேகர், தற்போது ICU-வில் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். மூளைக்கு செல்ல வேண்டிய ரத்தம் தடைப்பட்டிருப்பதால் ஆபரேஷன் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 3, 2025
உடல் எடை குறைய வெறும் 30 விநாடிகள் இத பண்ணுங்க!

★Mountain Climbers செய்வது உடல் எடையை குறைத்து, முழு உடலையும் வலுப்படுத்தும் ★செய்முறை: இரு கைகளையும் தரையில் ஊன்றி, முட்டியையும், கால்களையும் நேராக வைத்தபடி இருக்கவும் (படத்தில் உள்ளது போல) ★இப்போது மெதுவாக, ஒரு முழங்காலை மார்பு நோக்கி கொண்டு வந்துவிட்டு, கீழறக்கவும் ★அதே போல, காலை மாற்றி கொஞ்சம் வேகமாக செய்யவும். ஆரம்பத்தில் 20 முதல் 30 விநாடிகள் மட்டும் செய்யலாம். SHARE IT.
News November 3, 2025
Cinema Roundup: தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே

*ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் படத்தில் தனுஷுக்கு ஜோடி ஆகிறார் பூஜா ஹெக்டே. *கமலஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு ‘நாயகன்’ ரீ-ரிலீசாகிறது. *நவ.14-ம் தேதி முதல் நெட்பிளிக்ஸில் ‘டியூட்’ ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது. *கிஷென் தாஸின் ‘ஆரோமலே’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது. *’பராசக்தி’ முதல் சிங்கிள் இந்த வாரம் வெளியாகும் என ஜி.வி.பிரகாஷ் குமார் அறிவிப்பு. *விக்ரம் 63-ல் மீனாட்சி செளத்ரி நடிக்கவுள்ளார்.
News November 3, 2025
கஷ்டங்களை தீர்க்கும் சோமவார பிரதோஷம்!

திங்கட்கிழமை பிரதோஷம் மிக சிறப்பான பலன்களை தரும். சிவனின் படத்திற்கு தீபம் ஏற்றி, விரதத்தை தொடங்க வேண்டும். மாலை 4:30- 6 மணிக்குள், ஒரு தட்டில் பச்சரிசியை பரப்பி, அதன் மேல் 12 நெல்லிக்கனி தீபத்தை வட்ட வடிவில் ஏற்ற வேண்டும். பிறகு ‘ஓம் நமசிவாய’ என 54 முறை சொல்லி, சிவனுக்கு வில்வ இலைகளால் அர்ச்சனை செய்யணும். விரதமிருக்க விரும்புபவர்கள் பால், பழம், பழச்சாறு மட்டுமே எடுத்து கொள்ள வேண்டும். SHARE IT.


