News November 2, 2025
கிருஷ்ணகிரி: B.Sc, B.E, B.Tech போதும், ரூ.1.4 லட்சம் சம்பளம்!

மத்திய அரசின் பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் 340 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எலெக்ட்ரிக்கல், எலெக்ட்ரானிக்ஸ், கம்யூனிகேஷன், டெலி கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கணினி அறிவியல் ஆகிய பிரிவுகளில் B.E / B.Tech / B.Sc முடித்திருக்க வேண்டும். சம்பளமாக ரூ.40,000-ரூ.1,40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Similar News
News November 3, 2025
கிருஷ்ணகிரி: இ-சேவையில் 60 ரூபாய்க்கு இத்தனை வசதியா?

அரசு இ-சேவை மையங்களில் ஆவணங்கள் தொடர்பான பிரச்னைகளை வெறும் 60 ரூபாயில் முடித்துவிடலாம். ஆம். பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, குடிபெயர்வு, விவசாய வருமானம், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், தமிழ் வழியில் படித்ததற்கான சான்று உள்ளிட்ட பல்வேறு சேவைகளுக்கு வெறும் 60 ரூபாய் கட்டணம்தான். வெளியே சென்று விண்ணப்பித்தால் ரூ.100+க்கு மேல் வசூலிக்கப்படும். ஷேர் பண்ணுங்க.
News November 3, 2025
கிருஷ்ணகிரி: மினி வேன் கவிழ்ந்து விபத்து!

ஓசூர் நெடுஞ்சாலை துறையில் வட்டாட்சியராக உள்ளவர் தேன்மொழி. இவர் தனது குடும்பத்துடன் நேற்று (நவ.2) அஞ்செட்டி அடுத்த உரிகத்தில் கோவில் திருவிழாவுக்கு சென்று ஓசூர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது அவர்கள் சென்ற டெம்போ டிராவலர் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டது. இதில் காயமடைந்த 17 பேரும் ஓசூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News November 3, 2025
கிருஷ்ணகிரி: இரவு ரோந்து பணி விவரம்

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நேற்று (02.11.2025) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். வீட்டில் தனியாக வசிக்கும் பெண்கள் மற்றும் முதியவர்கள் ஏதேனும் அசம்பாவிதங்கள் ஏற்பட்டால் உடனடியாக இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


